ஆஸ்கர் ரேசில் இருந்து வெளியேறியது ஜெய்பீம்...மரைக்காயருக்கும் இடமில்லை
லாஸ் ஏஞ்சல்ஸ் : 2021ம் ஆண்டிற்கான ஆஸ்கர் நாமினேஷன் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவின் ஜெய்பீம் மற்றும் மோகன்லாலின் மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்மன் ஆகிய படங்கள் இடம்பெறவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், திரைப்பட கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சினிமாத்துறையின் மிக உயரிய விருதாகவும், கெளரவமாகவும் பார்க்கப்படுவது ஆஸ்கர் விருதுகள். இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் வழங்கப்படும். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு, இரண்டு மாதங்கள் தாமதமாக ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது.

ஆஸ்கர் விருது விழா எப்போ
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான, அதாவது 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 31ம் தேதி நடைபெற உள்ளது. 2021 ம் ஆண்டின் ஆஸ்கார் விருதிற்காக 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட படங்களின் Shortlist 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் இறுதிப்பட்டியல் இன்று(பிப்ரவரி 8) வெளியிடப்பட உள்ளது. பரிந்துரைக்கப்பட்ட இந்த பட்டியலின் மீதான ஓட்டுப்பதிவு மார்ச் 17ம் தேதி துவங்கி, மார்ச் 22 வரை நடைபெறும். இந்த ஓட்டுக்களின் அடிப்படையிலேயே 94வது ஆஸ்கார் விருதுகள் மார்ச் 27ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளன.

நாமினேஷனில் 2 இந்திய படங்கள்
இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதிற்கான இந்தியாவில் இருந்து சூர்யா நடித்த ஜெய்பீம் மற்றும் மோகன்லால் நடித்த மரைக்காயர்: அரபிக்கடலின்டே சிம்மம் ஆகிய படங்கள் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளன. இதில் சூர்யா நடித்த ஜெய்பீம் ஏற்கனவே சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்திற்கு நிச்சயம் விருது கிடைக்கும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்கர் ரேசில் ஜெய்பீம் இல்லை
மொத்தம் 23 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதிற்காக நாமினேட் செய்யப்பட்ட படங்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதிற்கு நாமினேட் செய்யப்பட்ட படங்களின் பட்டியலை Leslie Jordan மற்றும் Ellis Ross ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்த பட்டியலில் சமூக பிரச்சனைகளை அதிகம் பேசி, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த ஜெய்பீம் படம் இடம்பெறும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

மரைக்காயருக்கும் இடமில்லை.
பல சர்வதேச விருதுகளை வென்ற ஜெய்பீம் படம் ஆஸ்கர் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறவில்லை. அதே போல் வரலாற்று பின்னணி கொண்ட மோகன்லாலின் மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்மம் படமும் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஏமாற்றத்தை தந்துள்ளது.


Click it and Unblock the Notifications











