சைமா விழாவில் 7 விருதுகள்.. தட்டித்தூக்கிய சூரரைப்போற்று டீம்.. குவியும் வாழ்த்துகள்!

சென்னை : இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா சூர்யாவை வைத்து இயக்கிய படம் சூரரைப் போற்று. சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்த இந்த படம் 2020 ம் ஆண்டு நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது. இருந்தாலும் பிரம்மாண்ட வெற்றியை இந்த படம் பெற்றது.

Suriyas Soorarai Pottru bags 7 SIIMA awards

ஓடிடி.,யில் அதிக முறை பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை படைத்த சூரரைப் போற்று, சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் திரையிடப்பட்டு, பல விருதுகளை வென்றுள்ளது. சிறந்த சர்வதேச படங்களின் பட்டியலிலும் இடம்பெற்று, புதிய சாதனை படைத்தது.

ஆஸ்கார் விருதிற்காகவும் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டது. தமிழில் பிரம்மாண்ட சாதனை படைத்து, உலக பாப்புலர் ஆன சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்யவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொரோனாவால் கடந்த ஆண்டு நடத்த முடியாமல் போன SIIMA விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. 2020 - 2021 ம் ஆண்டிற்கான சினிமா துறை விருதுகள் வழங்கப்பட்டது. இதில் 2020 ம் ஆண்டிற்கான சினிமா விருதுகளில் சூரரைப் போற்று படம் 7 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த நடிகர் - சூர்யா
சிறந்த படம் - சூரரைப் போற்று
சிறந்த டைரக்டர் - சுதா கொங்கரா
சிறந்த நடிகை - அபர்னா பாலமுரளி
சிறந்த இசையமைப்பாளர் - ஜிவி.பிரகாஷ்
சிறந்த ஒளிப்பதிவாளர் - நிகித்பொம்மி
சிறந்த பின்னணி பாடகர் - ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்

இந்த தகவலை 2டி என்டர்டைன்மென்ட் மகிழ்ச்சியுடன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதோடு சூரரைப் போற்று டீம் சைமா விருது வழங்கும் விழாவில் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களையும் பகிர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X