சிறந்த விளம்பரங்களுக்கான TEA அவார்ட்ஸ் - சூர்யா, சிம்ரன், தேவயானி, ராதாரவிக்கு விருது!

By Shankar

சென்னை: சிறந்த விளம்பரங்களுக்கான தாமஸ் எடிசன் அட்வர்டைஸ்மெண்ட் விருது (TEA Awards) வழங்கும் விழாவில் நடிகைகள் சிம்ரன், தேவயானி, ராதாரவி, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் விருது பெற்றனர்.

எடிசன் அவார்ட்ஸ் அமைப்பின் தலைவர் ஜெ செல்வகுமார் இந்த 2013-ம் ஆண்டிலிருந்து புதிதாக விளம்பரங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்துகிறார்.

இந்த ஆண்டு சிறந்த விளம்பரங்கள், தயாரித்த நிறுவனங்கள் மற்றும் அதில் நடித்த கலைஞர்களுக்கு ஆன்லைன் வாக்கெடுப்பு மூலம் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை லேடி ஆண்டாள் அரங்கில் நடந்த இந்த வண்ணமிகு விழாவில் பிரபலமான விளம்பரங்களில் நடித்த நடிகர் நடிகைகள், அந்த விளம்பரங்களைத் தயாரித்த நிறுவனங்கள் பங்கேற்றன(ர்).

மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்

மத்திய தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிப் பேசினார். விளம்பரங்களின் முக்கியத்துவம் குறித்து அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

சூர்யாவுக்கு

ஏர்செல் ஆண் விளம்பரத் தூதருக்கான ராயல் கிங் விருது ஏர்செல் விளம்பரத்தில் இடம்பெற்ற சூர்யாவுக்கு வழங்கப்பட்டது. குடும்ப நிகழ்ச்சிக்காக மும்பை சென்றுள்ள சூர்யா சார்பில் ரேணுகா ஜெயபால் பெற்றுக் கொண்டார்.

சிறந்த தொலைத் தொடர்பு விளம்பரத்துக்கான விருது ஏர்செல்லின் கனெக்டிங் ஹார்ட்ஸ் விளம்பரத்துக்குக் கிடைத்தது. இதனை அந்த நிறுவனத்தின் ரேணுகா ஜெய்பால், சங்கர் நாராயணன் பெற்றுக் கொண்டனர்.

சிறந்த ரியல் எஸ்டேட் விளம்பரத்துக்கான கேட் ஆப் ஈடன் கார்டன் விருது அக்ஷயா ஹோம்ஸ் விளம்பரத்துக்காக ஸ்ரீகாந்துக்கு வழங்கப்பட்டது.

சிறந்த நகைக்கடை விளம்பரத்துக்கான விருது ஜோஸ் ஆலுகாஸுக்கு வழங்கப்பட்டது. நிறுவனத்தின் இயக்குநர் வர்கீஸ் ஆலுக்காஸ் அதைப் பெற்றுக் கொண்டார்.

சிறந்த குளிர்பான விளம்ரத்துக்கான பெஸ்டிவ் செலப்ரேட்டர்ஸ் விருது செவன் அப்புக்காக தயாரிக்கப்பட்ட விளம்பரத்துக்கு வழங்கப்பட்டது. அதனை பெப்சிகோவின் தமிழக தலைவர் ஸ்ரீகாந்திடம் வழங்கினர்.

சிம்ரன்

குர்குரே பாக்கெட் திண்பண்டத்துக்காக சிம்ரன் தோன்றும் விளம்பரத்துக்காக தி டேஸ்டி ஸ்டிக்ஸ் விருது வழங்கப்பட்டது. நடிகை சிம்ரன் பெற்றுக் கொண்டு நன்றி கூறினார்.

Surya, Simran, Devayani get honoured in TEA award show

ஸ்ரீகாந்த்

ஆலயா வேட்டி சட்டை விளம்பத்தில் தோன்றிய நடிகர் ஸ்ரீகாந்துக்கு தி எத்னிக் ஐகான் விருது வழங்கப்பட்டது.

சிறந்த இரு சக்கர வாகன விளம்பரத்துக்கான தி வின்ட் ஆப் ஜூப்ளியேஷன் விருது மஹிந்திரா ட்யூரோ விளம்பரத்தில் நடித்த கரணுக்கு வழங்கப்பட்டது.

ராதாரவி

நேஷனல் வேட்டி விளம்பரத்தில் நடித்த ராதாரவிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

சர்வதேச அளவில் சிறந்த விளம்பரத்துக்கான விருது (The Journey of Delight Award ) மலேசியன் டூரிசத்துக்கு வழங்கப்பட்டது. மலேஷிய தூதர் சித்ராதேவி பெற்றுக் கொண்டார்.

ஏர் ஏசியா நிறுவனத்தின் விளம்பரத்துக்கு The Exquisite Pic Award வழங்கப்பட்டது. இதனை நிறுவனத்தின் இந்திய தலைவர் மிட்டு சண்டிலியா பெற்றுக் கொண்டார்.

சிறந்த அவுட்டோர் விளம்பரத்துக்கான The Panache of Showcase விருது மெட்ரோ மல்டி மீடியாவின் முரளிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த வங்கி

சிறந்த வங்கிக்கான விருது (Friendly Guardian) ரெப்கோ வங்கிக்கு வழங்கப்பட்டது. ரெப்கோ வங்கியின் எம்டி வரதராஜன் இதனைப் பெற்றுக் கொண்டார்.

சிறந்த கால் டாக்சிக்கான விருது என்டிஎல் கால் டாக்சிக்கு வழங்கப்பட்டது.

தேவயானி

மிராக்கிள் ஆப் மைல்ஸ்டோன் விருது நடிகை தேவயானி, ராம்நாத் Ram Nath RNB & IBP Studio - Malaysia Saint TFC -க்கு வழங்கப்பட்டது.

சிறந்த விளம்பரப் பட இசை அமைப்பாளருக்கான விருது விஜய் ஆன்டனிக்குக் கிடைத்தது. சிறந்த விளம்பர நிறுவனத்துக்கான விருது சேலஞ்ச் நிறுவனத்தின் ஜெயந்திக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நடிகர்கள் ரமேஷ் கண்ணா, குண்டு கல்யானம், நடிகை தேவயானி உள்பட பலரும் கலந்து கொண்டனர். நடிகர் வின்சென்ட் அசோகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X