சிறந்த இந்தி படமாக சிச்சோர் தேர்வு.. மகிழ்ச்சியை கொண்டாட சுஷாந்த் உயிருடன் இல்லையே.. ரசிகர்கள் வேதனை
சென்னை : பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான சிச்சோர் திரைப்படத்திற்கு சிறந்த இந்தி மொழி திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேசிய விருது கிடைத்திருக்கும் மகிழ்ச்சியை கொண்டாட சுஷாந்த் இல்லையே அவரது ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழ் ரசிகர்களுக்கு
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி படத்தின் மூலம் இந்திய அளவில் அனைவரின் கவனம் ஈர்த்தார் சுஷாந்த் சிங் ராஜ்புத். இப்படத்தின் மூலமே தமிழக ரசிகர்களுக்கம் பரிச்சியமான முகமானார் சுஷாந்த் சிங்.

சாதித்தார்
எவ்வித பின்புலமும் இல்லாமல் சீரியல் நடிகராக அறிமுகமாகி சினிமாவிலும் சாதித்ததற்காகவே சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அடுத்தடுத்து அவர் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் படங்கள்தான்.

பலரிடம் விசாரணை
இந்நிலையில், கடந்த ஜுன் 14-ஆம் தேதி தனது மும்பை பாந்த்ரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் சுஷாந்த் சிங் ராஜ்புத். அதில் குடும்பத்தினர், நண்பர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சுஷாந்தின் தற்கொலை அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவையே உலுக்கியது.

தேசிய விருது
இந்நிலையில் 67வது தேசிய திரைப்பட விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், அவர் நடிப்பில் வெளியான நிதேஷ் திவாரி இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான சிச்சோர் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஷ்ரத்தா கபூர் ஜோடியாக நடித்திருந்தார்.

சுஷாந்த் இல்லையே
ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கும் சந்தோஷத்தை கொண்டாட சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிருடன் இல்லையே என்கிற வேதனையில் ரசிகர்கள் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். மேலும், அவரது குடும்பத்தினர் சுஷாந்தின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











