சுஷ்மிதா சென்னுக்கு அன்னை தெரசா சர்வதேச விருது

By Siva

மும்பை: பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு அன்னை தெரசா சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் பல்வேறு என்.ஜி.ஓ.க்கள் மற்றும் தர்மகாரிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சமூக நீதிக்காக பாடுபடும் அவரை பாராட்டி தி ஹார்மனி பவுன்டேஷன் என்ற என்ஜிஓ அவருக்கு அன்னை தெரசா சர்வதேச விருதை வழங்கி கௌரவித்தது.

போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் இருந்து குழந்தைகளை மீட்கும் அவுட்லா மோட்டார்சைக்கிள் கிளப் உறுப்பினர் சாம் சைல்டர்ஸுக்கும் இந்த விழாவில் விருது வழங்கப்பட்டது.

விருது

விருது

கன்னியாஸ்திரி கையால் விருது பெற்றார் சுஷ்மிதா சென். விருதை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு காட்டி மகிழ்கிறார்.

சுஷ்மிதா

சுஷ்மிதா

தனக்கு விருது கிடைத்தது குறித்து சுஷ்மிதா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை அவர் செய்த ட்வீட்டில், அழகான மக்களே!.... நேற்று இரவு அன்னை தெரசா சர்வதேச விருது பெற்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம் சைல்டர்ஸ்

சாம் சைல்டர்ஸ்

விழா மேடையில் விருது பெற்ற சாம் சைல்டர்ஸுடன் நிற்கும் சுஷ்மிதா சென். போராளிகளிடம் இருந்து சூடானில் உள்ள குழந்தைகளை மீட்க தனது வாழ்வை அர்ப்பணித்துள்ள சாம் சைல்டர்ஸை சந்திக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சுஷ்மிதா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த விருதை பெற்றுள்ள முதல் அமெரிக்கர் சைல்டர்ஸ் தான்.

மகேஷ் பட்

மகேஷ் பட்

விருது பெற்ற சுஷ்மிதாவை கட்டி அணைத்து வாழ்த்தும் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட். திருமணம் ஆகாத சுஷ்மிதா இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X