தேன் படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது...குவியும் பாராட்டுக்கள்

புதுச்சேரி : ஆண்டுதோறும் புதுச்சேரி அரசின் சார்பில் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. புதுச்சேரி முதல்வர் சார்பில் ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் என்ற பெயரில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

Thean movie won best film 2020 award by Pudhucherry government

அப்படி 2020 ம் ஆண்டிற்கான சிறந்த படமாக டைரக்டர் கணேஷ் விநாயகன் இயக்கிய தேன் படம் தேர்வு செய்யப்பட்டு, விருது அறிவிக்கப்பட்டுள்ளது.விரைவில் இந்த விருது வழங்ககும் விழா நடைபெற உள்ளதாம்.

2020 ம் ஆண்டின் மார்ச் மாதம் வெளியான படம் தேன். கணேஷ் விநாயகன் இயக்கிய இந்த படத்தில் தருண், அபர்ணாதி, அருள்தாஸ், பவ லட்சுமணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சனந்த் பரத்வாஜ் இசையமைத்திருந்தார். சிறிய பட்ஜெட் படமான தேன், அனைவராலும் பாராட்டப்பட்டது.

கிராமத்தில் வசிக்கும் படிப்பறிவில்லாத தேன் எடுக்கும் தொழிலாளி. அவரது மனைவி அரிதான நோயால் பாதிக்கப்படுகிறார். அந்த நோய் பற்றிய அறிய முடியாமல், தேன் எடுக்கும் தொழிலாளி சந்திக்கும் பிரச்சனைகள், சிக்கல்கள் பற்றி சொல்வது தான் படத்தின் கதை.

இந்த படத்தை சிறந்த படமாக புதுச்சேரி தகவல் தொழில்நுட்ப துறை இயக்குனரகம் தேர்வு செய்துள்ளது. இந்த தகவல் வெளியானதையடுத்து தேன் படக்குழுவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தேன் படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளதை கணேஷ் விநாயகன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

புனே சர்வதேச திரைப்பட விழா, Cinequest film and creativity திருவிழா, கோவாவில் நடைபெற்ற இந்தியன் பனோரமா உள்ளிட்ட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. கோவாவில் நடந்த இந்தியன் பனோரமா திரைப்பட விழாவில் அசுரன் படத்துடன் திரையிடப்பட்ட ஒரே தமிழ் படம் தேன் படம் தான்.

டெல்லி திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் புதுச்சேரியில் நடத்தப்படும் இந்தியன் பனோரமா திரைப்பட விழாவில் ஒளிபரப்பப்படுவது வழக்கம். இதில் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது வழங்கும் விழா செப்டம்பர் 24 ம் தேதி புதுச்சேரி முதல்வர் தலைமையில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் விருதுகளை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழங்க உள்ளார். இந்த விருது, ஒரு லட்சம் பரிசு மற்றும் வெள்ளி நினைவு பரிசினை உள்ளடக்கியதாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X