தென்மேற்கு பருவக்காற்று சிறந்த படமாக தேர்வு

புதுமுகம் விஜய் சேதுபதி, வசுந்தரா, சரண்யா நடிப்பில் உருவான தென்மேற்குப் பருவக்காற்று படத்தை கேப்டன் ஷிபு ஐசக் தயாரித்த படம் தென்மேற்குப் பருவக்காற்று.
கடந்த டிசம்பர் மாதம் வெளியான இந்தப் படம் பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றது.
இந்தப் படம் சமீபத்தில் நடந்த நாக்பூர் திரைப்பட விழாவிலும் பங்கேற்றது. படம் பார்த்த பார்வையாளர்கள் மற்றும் நடுவர்கள் இந்தப் படத்தை தமிழின் சிறந்த படமாகத் தேர்வு செய்தனர்.
இதற்கான விருதினை படத்தின் தயாரிப்பாளர் ஷிபு ஐசக் நாக்பூர் சென்று பெற்றுக் கொண்டார்.
Comments
சிறந்த படம் சீனு ராமசாமி தென்மேற்கு பருவக்காற்று nagpur film festival seenu ramasamy thenmerku paruvakatru


Click it and Unblock the Notifications