For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சர்வதேச அரங்கில் விருதுகளை அள்ளிய "தென்றல் வந்து தீண்டும் போது"..!!!

  |

  சென்னை: அருள்சங்கர் என்பவர் இயக்கிய "தென்றல் வந்து தீண்டும் போது" என்ற குறும்படம் ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, கொல்கத்தா, பஞ்சாப், ஹைதராபாத், சென்னை என சர்வதேச அரங்கில் பல திரைப்பட விழாக்களில் இதுவரை 22 விருதுகளை வென்று குவித்திருக்கிறது.

  நார்வே, இத்தாலி, ஊட்டி, புதுடெல்லி என பல திரைவிழாக்களிலும் திரையிடப்பட்டு பரவலான கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. சமீபத்தில் கல்கத்தாவில் நடைபெற்ற JEAN LUC GODARD AWARD என்ற சர்வதேச திரைவிழாவில் 140க்கும் அதிகமான நாடுகளிலிருந்து வந்த 3500 படங்களில் டாப் 85ல் இடம்பெற்று இறுதிச்சுற்றில் பங்கு பெற்றது இக்குறும்படம்.

  thenrdal vandhu theendum pothu gets international accolation

  லாஸ் வேகாஸில் நடைபெற்ற ஒரு திரைவிழாவில் இக்குறும்படத்தை கண்டு இரசித்த ஹாலிவுட் இயக்குனர் டெரிக் குவிக் (170 திரை விருதுகளை வென்றிருப்பவர்) இக்குறும்படத்தை லாஸ் ஏஞ்சல்ஸின் பழமையான திரையரங்குகளில் ஏழு நாட்கள் திரையிட அழைப்பு விடுத்திருக்கிறார். லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு படமோ குறும்படமோ ஏழு நாட்கள் திரையிடப்பட்டால் திரைவிருதுகளின் உயரிய விருதான ஆஸ்கருக்கு நேரிடையாக தகுதி பெறும் அந்தஸ்தை பெறும். சமீபத்தில் "ரோமா" என்ற குறும்படம் இவ்வாறே ஆஸ்கருக்கு தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்பான்ஸர் கிடைத்தால் இக்குறும்படமும் லாஸ் ஏஞ்சல்ஸில் திரையிடப்படும் வாய்ப்பை பெறும்.

  thenrdal vandhu theendum pothu gets international accolation

  மென்பொருள் பொறியாளரான அருள்சங்கர் என்பவர் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் குறும்படம். முதல் குறும்படத்திலேயே தனது திரைக்கதையால் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

  கணவன், மனைவிக்குள் இருக்கும் பொஸஸிவ்னெஸ் அவர்களுக்கிடையில் இருக்கும் அதீத காதலால்தான் என்பதை அழகான கதையாக்கியிருக்கிறார். இரு காதல் நெஞ்சங்களுக்கிடையில் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதே கதையின் பிரதானம். எண்பதுகளில் இருந்து இதுவரை இசைஞானியின் இசை தமிழர்களின் வாழ்வில் இரண்டற கலந்திருப்பதை யாராலும் மறுக்கவே முடியாது. அதை ஒரு அழகான காதல் கதையின் பின்னணியில் உணர்ச்சிமிக்க சமர்ப்பணமாக்கியிருக்கிறார் இயக்குனர். இசைஞானிக்கு ஒரு ரசிகனாக இதைவிட பெரிய சமர்ப்பணம் இருக்க முடியாது. பல கோடி இசைஞானியின் ரசிகர்களின் சார்பாக இயக்குனருக்கும் இக்குறும்படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்..!!

  இதுவரை இக்குறும்படம் வென்றிருக்கும் விருதுகளின் விவரம் 25கும் மேல் இருப்பதால் , டாப் டென் பட்டியலை பார்க்கலாம்

  1. சிறந்த நடிகை - கல்கத்தா இன்டர்நேஷ்னல் கல்ட் பிலிம் பெஸ்டிவல்

  2. சிறந்த குறும்படத்திற்கான தங்க விருது - விர்ஜின் ஸ்பிரிங் பெஸ்ட் , கல்கத்தா

  3. சிறந்த இசைக்கான தங்க விருது - விர்ஜின் ஸ்பிரிங் பெஸ்ட் , கல்கத்தா

  4. அறிமுக இயக்குனரின் சிறந்த குறும்படத்திற்கான வெள்ளி விருது - விர்ஜின் ஸ்பிரிங் பெஸ்ட் , கல்கத்தா

  5. சிறந்த ஒளிப்பதிவாளர் - லேக் வியூ இன்டர்நேஷ்னல் பிலிம் பெஸ்டிவல், மோகா, பஞ்சாப்

  6. சிறந்த ஒளிப்பதிவாளர் - AAB இன்டர்நேஷ்னல் பிலிம் பெஸ்டிவல், மோகா, பஞ்சாப்

  7. ஸ்பெஷல் பெஸ்டிவல் மென்சன் - இரண்டாவது இந்திய உலக திரைப்படவிழா, ஹைதராபாத்

  8. சிறந்த 10 இறுதிச்சுற்று குறும்படங்கள் - பிளே பட்டன் குறும்படவிழா, சென்னை

  9. அவுட்ஸ்டேண்டிங் அச்சிவ்மெண்ட் விருது - கல்ட் கிரிட்டிக் சினிமா விருதுகள், கல்கத்தா

  10. இறுதிச்சுற்று குறும்படம் - ஈரோஸியா இன்டர்நேஷ்னல் மாத திரைப்படவிழா, மாஸ்கோ, இரஷ்யா

  ஒரு பக்கம் இளையராஜா ரசிகர்கள் , இன்னொரு பக்கம் நல்ல குறும்படங்களை ஆதரிக்கும் குறும்பட ரசிகர்கள் .

  தமிழ் சினிமாவின் புது வில்லன்... ஹிந்தி நடிகரின் மருமகன்!

  நல்ல கதைகளை நல்ல கருத்துக்களை கூறும் படம் மூலம் சின்ன பட்ஜெட்டில் சொல்வது தான் இன்றைய ட்ரெண்டிங்கான விஷயம். பெரிய படத்தை இயக்கிய இயக்குனர்கள் கூட இப்போதெல்லாம் கூறும் படம் இயக்குகிறார்கள் . தனக்கு தானே பரீட்சை வைத்து கொள்வது போலே அடிக்கடி குறும்படம் எக்ஸாம் வைத்து கொள்வது நல்லது தான் .

  "தென்றல் வந்து தீண்டும் போது " குறும்படம் இன்னும் பல ரசிகர்களின் மனதை தீண்டும் என்ற நம்பிக்கை நிச்சியம் உள்ளது . அருள் சங்கர் போன்ற இயக்குனர்கள் விரைவில் பெரிய படங்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துவோம் .

  Read more about: tamil short films
  English summary
  Thenrdal vandhu theendum pothu Tamil short filim has got international accolation from various countries.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X