கோச்சடையான் உட்பட 3 படங்களுக்காக ஆஸ்கர் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரை
சென்னை: கோச்சடையான், தி 100 ஃபூட் ஜார்னி, மில்லியன் டாலர் ஆர்ம் படங்களுக்கான சிறந்த இசை அமைப்புக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி 20-ந் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சஸ்லில் நடக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் ஜனவரி 15ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதில் சிறந்த இசை அமைப்புக்காக 114 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதில் ஒன்று ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் மோஷன் கேப்சர் அனிமேஷனில் வெளியான ‘கோச்சடையான்' படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் பெயரும் பட்டியலில் இணைந்துள்ளது.
மேலும் தி 100 ஃபூட் ஜார்னி, மற்றும் மில்லியன் டாலர் ஆர்ம் உள்ளிட்ட படங்களுக்காகவும் சிறந்த இசையமைப்புக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த விருதில் கோச்சடையான் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் தமிழுக்கு கிடைக்கும் முதல் ஆஸ்கார் விருதாக இது அமையும்.
ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஏற்கெனவே ரஹ்மான் ஆஸ்கர் விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











