டைட்டானிக் ரோஸ் முதல் பிளாக் விடோ வரை.. டைம் 100 பட்டியலில் இடம்பிடித்த சினிமா பிரபலங்கள்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல டைம் பத்திரிகை வெளியிட்டுள்ள டாப் 100 உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இந்த ஆண்டு இந்தியாவை சேர்ந்த ஒரு நடிகரும் இடம் பெறவில்லை.

வெகு சில ஹாலிவுட் நடிகர்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

டைட்டானிக் ஹீரோயின் கேட் வின்ச்ஸ்லெட், அவெஞ்சர்ஸ் படங்களில் பிளாக் விடோவாக கலக்கிய ஸ்கார்லெட் ஜோஹன்சன் மற்றும் ஆஸ்கர் வென்ற இயக்குநர் க்லோ சாஹோ உள்ளிட்ட 16 சினிமா பிரபலங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

டைம் பத்திரிகை

டைம் பத்திரிகை

அமெரிக்காவில் இயங்கி வரும் பிரபல டைம் பத்திரிகை ஆண்டு தோறும் இது போன்று உலகின் சக்தி வாய்ந்த 100 பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகி உலகளவில் வைரலாகி வருகிறது.

இந்திய பிரபலங்கள்

இந்திய பிரபலங்கள்

உலகளவில் சக்தி வாய்ந்த பிரபலங்கள் பட்டியலில் அரசியல் தலைவர்கள் பிரிவில் இந்திய பிரதமர் மோடி மற்றும் மம்தா பானர்ஜியின் பெயர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன. விளையாட்டு, சினிமா உள்ளிட்ட மற்ற பல பிரிவுகளில் இந்தியர்கள் யாரும் இடம்பெறவில்லை.

சினிமா பிரபலங்கள்

சினிமா பிரபலங்கள்

கலைஞர்கள் எனும் பிரிவில் முழுக்க முழுக்க வெளிநாட்டு பிரபலங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஹாலிவுட் நடிகைகள் இந்த ஆண்டு உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலை நிரப்பி உள்ளனர். மொத்தம் 16 கலைஞர்களில் வெகு சில கலைஞர்களே உலகளவில் பரீட்சையமானவர்களாக உள்ளனர்.

டைட்டானிக் ரோஸ்

டைட்டானிக் ரோஸ்

டைட்டானிக் படத்தில் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை கேட் வின்ஸ்லெட் தான் இந்த ஆண்டு சினிமா பிரபலங்களில் முன்னணி இடத்தை அலங்கரித்துள்ளார். ஆஸ்கர் விருதுகளை அள்ளி குவித்துள்ள நடிகை கேட் வின்ஸ்லெட் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான Ammonite திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், டைம் இதழ் தனது டாப் 100 பட்டியலில் அவருக்கு இடம் கொடுத்திருக்கிறது. அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களிலும் கேட் வின்ஸ்லெட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஸ்கார்லெட் ஜோஹன்சன்

ஸ்கார்லெட் ஜோஹன்சன்

அவெஞ்சர்ஸ் படங்களில் பிளாக் விடோவாக கலக்கிய பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடிப்பில் சமீபத்தில் வெளியான சோலோ அவெஞ்சர் படமான பிளாக் விடோ உலகளவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. இந்நிலையில், டைம் இதழின் டாப் 100 பட்டியலில் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சனும் இடம்பிடித்துள்ளார்.

ஆஸ்கர் இயக்குநர்

ஆஸ்கர் இயக்குநர்

சீனாவை சேர்ந்த பெண் இயக்குநரான க்லோ சாஹோ (Chloe Zhao) நோமேட்லேண்ட் திரைப்படத்தை இயக்கியதற்காக இந்த ஆண்டு சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றார். மார்வெல் திரையுலகின் அடுத்த பிரம்மாண்ட படமான Eternals திரைப்படத்தையும் இயக்கியுள்ள இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை டைம் இதழ் வழங்கி உள்ளது.

பிரிட்னி ஸ்பியர்ஸ்

பிரிட்னி ஸ்பியர்ஸ்

ஆர்டிஸ்ட் பிரிவில் இல்லாமல் ஐகான் பிரிவில் பிரபல அமெரிக்க பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் இந்த டாப் 100 பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 39 வயதாகும் இவர் சில நாட்களுக்கு முன்னர் தான் புதிய ஆண் நண்பரான சாம் அஸ்காரியை நிச்சயம் செய்தார். ஏற்கனவே இருமுறை திருமணம் செய்து விவாகரத்தும் செய்த இவருக்கு இரு குழந்தைகளும் உள்ளனர்.

ஆயுஷ்மான் குரானா

ஆயுஷ்மான் குரானா

கடந்த ஆண்டு டைம் 100 உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஆயுஷ்மான் குரானா இடம்பிடித்து அசத்தி இருந்தார். ஆனால், இந்த ஆண்டு ஒரு இந்திய நடிகர் கூட இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X