இன்று தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா

2006ம் ஆண்டுக்கான 54வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் பருத்தி வீரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதினை பிரியா மணி பெற்றார். வங்காள மொழி நடிகர் செளமித்ரா சாட்டர்ஜி சிறந்த நடிகருக்கான விருதினைப் பெறுவதாக அறிவிக்கப்பட்டார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, திலீப் குமார், லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டது. இயக்குநர் தபன் சின்ஹாவுக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது.
விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் விருதுகளை வழங்கி கெளரவிக்கிறார். மொத்தம் 52 விருதுகள் இன்றைய விழாவின்போது வழங்கப்படவுள்ளன.
Comments


Click it and Unblock the Notifications