twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சில்லுக் கருப்பட்டி … கன்னிமாடம் திரைப்படங்களுக்கு உலக அரங்கில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் !

    |

    சென்னை : சென்ற ஆண்டு தமிழில் வெளியான சில்லுக் கருப்பட்டி திரைப்படம் பல்வேறு விருதுகளை பெற்று மக்களின் பாராட்டு மழையில் நனைந்து வந்த நிலையில் இப்போது உலக அரங்கில் மற்றுமொரு கௌரவம் கிடைத்துள்ளது.

    சமுத்திரக்கனி, மணிகண்டன், சுனைனா, நிவேதிதா சதீஷ், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பிரபலமான நடிகர்கள் நடித்து இருக்க இந்த படம் 4 வேறு காதல் கதைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

    இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கியிருந்த இந்த திரைப்படத்திற்கு வெளியானது முதல் இன்றுவரை பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற நிலையில் இப்பொழுது மற்றுமொரு கௌரவம் திரைப்பட கிடைத்துள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    ஜி.வியின் 'ஹை அண்ட் ட்ரை' பாடல்... ஏ.ஆர்.ரஹ்மான்.. தனுஷ் வெளியிடுகிறார்கள் !ஜி.வியின் 'ஹை அண்ட் ட்ரை' பாடல்... ஏ.ஆர்.ரஹ்மான்.. தனுஷ் வெளியிடுகிறார்கள் !

    குறிஞ்சிப்பூ போல

    குறிஞ்சிப்பூ போல

    பூவரசம் பீப்பி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹலிதா சமீம். இந்திய திரைப்படத் துறையில் பெண் இயக்குனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம், அந்த அளவுக்கு மிகச் சொற்ப அளவே பெண் இயக்குனர்கள் தங்களது வெற்றியை நிலைநாட்டி வரும் நிலையில் அதில் ஹலிதா சமீம் குறிஞ்சிப்பூ போல தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார்.

    லீட் ரோலில்

    லீட் ரோலில்

    சமுத்திரக்கனி, சாரா அர்ஜுன், நிவேதிதா சதிஷ், மணிகண்டன், லீலா சாம்சன், மற்றும் க்ராவ்மக ஸ்ரீராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நான்கு வெவ்வேறு கதைகளில் லீட் ரோலில் நடித்து இருக்க, சில்லுக்கருப்பட்டி ஆன்ந்தாலஜி திரைப்படமாக சென்ற ஆண்டு வெளியானது.

    இயக்குனர் ஷங்கர்

    இயக்குனர் ஷங்கர்

    இவ்வாறு இந்த திரைப்படம் வெளியானது முதல் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வந்த நிலையில் பல்வேறு விருதுகளையும் வென்று வந்தது. தமிழ் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என மொழிகளைத் தாண்டி பல ரசிகர்களையும் கவர்ந்து இருந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர், பாரதிராஜா என பலரும் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    வெற்றி வாகை சூடியது

    வெற்றி வாகை சூடியது

    இந்நிலையில் " டொரொண்டோ தமிழ் ஃபிலிம் ஃபெஸ்டிவல்" விழாவில் தமிழ் திரைப்படங்களின் சார்பாக சில்லுக்கருப்பட்டி, கன்னிமாடம் உள்ளிட்ட திரைப்படங்கள் கலந்து கொண்டது. இதில் சில்லுக்கருப்பட்டியும் கன்னிமாடமும் போட்டியில் பங்குபெற தேர்வாகி இருக்க, அதில் சில்லுக் கருப்பட்டி திரைப்படம் வெற்றி வாகை சூடி உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கிறது.

    நன்றியை தெரிவித்து

    நன்றியை தெரிவித்து

    " டொரொண்டோ தமிழ் ஃபிலிம் ஃபெஸ்டிவல்"-ல் சில்லுக்கருப்பட்டி திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த படத்தின் இயக்குனர் ஹலிதா சமீம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபோன்ற விழாக்களில் இந்த மாதிரி நற்செய்திகள் வருவது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என தனது நன்றியை தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.

    English summary
    Toronto Tamil Film Festival "- Receives sillu karupatti Award
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X