twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டொரான்டோ தமிழ் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்.. விருதுகளை குவித்த தமிழ் படங்கள்.. பட்டியல் இதோ!

    |

    கனடா: டொரான்டோ தமிழ் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் தமிழில் வெளியான மகாமுனி உட்பட பல்வேறு திரைப்படங்கள் விருதுகளை குவித்துள்ளன.

    இரண்டாவது டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2021 இம்மாதம் Sep 10 - 12, 2021 மிகவும் சிறப்பாக நடைபெற்று விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கனடாவில் கோவிட்டின் நான்காவது அலை உள்ள நிலையிலும் இவ்விழா மிகவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

    நந்திதா ஸ்வேதாவின் அப்பா திடீர் மரணம்...பிரபலங்கள் இரங்கல் நந்திதா ஸ்வேதாவின் அப்பா திடீர் மரணம்...பிரபலங்கள் இரங்கல்

    கலைஞர்கள், அரசு பிரதிநிதிகள், அமைச்சர்கள் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்து விழாவுக்கான மிகப்பெரும் அங்கீகாரத்தை வழங்கியிருந்தார்கள்.

    தமிழருக்கான திரைப்பட விழா

    தமிழருக்கான திரைப்பட விழா

    உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழருக்கான திரைப்பட விழாக்கள் என்பது மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன. இந்தியா மற்றும் இலங்கைக்கு அப்பால், தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்படுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது.

    பல்லாயிரம் தமிழ் திரைப்படங்கள்

    பல்லாயிரம் தமிழ் திரைப்படங்கள்

    பல்லாயிரம் தமிழ் திரைப்படங்கள், குறும்படங்கள் வெளிவருகின்ற போதிலும், அத்திரைப்படங்கள் உலகில் தமிழ் அல்லாத திரைப்பட விழாக்களிலேயே சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் நிலையே இதுவரை காலமும் தமிழ் திரை கலைஞர்களுக்கும், திரைப்படங்களுக்கும் உள்ள நிலை.

    283 படங்கள் பங்கேற்பு

    283 படங்கள் பங்கேற்பு

    நிச்சயமாக டொரான்டோ தமிழ் திரைப்பட விழா இக்குறையை எதிர்வரும் காலங்களில் மிகவும் சிறப்பானதாக நிறைவுசெய்யும். இந்த விருது விழாவில் உலகெங்கிலும் இருந்து 283 திரைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. உலகின் தலைசிறந்த ஜூரி (Jury)குழுமம், சகல திரைப்படங்களையும் பார்த்து வெற்றிபெற்ற திரைப்படங்களை தேர்வு செய்திருந்தார்கள்.

    சிறந்த படத்திற்கான ஜூரி விருது

    சிறந்த படத்திற்கான ஜூரி விருது

    56 திரைப்படங்கள் திரையிடுவதற்காக தெரிவுசெய்யப்பட்டு திரையிடப்பட்டன. இந்தியா, இலங்கை, மலேசியா, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வந்த படங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. அதன்படி சிறந்த படத்திற்கான ஜூரி விருது சியங்கள் படத்திற்கு கிடைத்துள்ளது. இப்படத்தை வைகரை பாலன் என்பவர் இயக்கியிருந்தார்.

    சிறந்த இயக்குநருக்கான ஜூரி விருது

    சிறந்த இயக்குநருக்கான ஜூரி விருது

    சிறந்த குறும்பட இயக்குனருக்கான ஜூரி விருது யாதுமாகி நின்றாய் படத்திற்காக நித்திஷ் பிரபூஜித்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பார்வையாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி சிறந்த திரைப்படத்திற்கான பார்வையாளர் விருது ஒதுக்கீடு திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

    சிறந்த குறும்பட இயக்குநர்

    சிறந்த குறும்பட இயக்குநர்

    மேலும் சிறந்த அம்ச ஆவணப்படத்திற்கான ஜூரி விருது பெருங்கத்தூர் பி. ராஜகோபால் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த சமூக செய்தி குறும்பட இயக்குனருக்கான ஜூரி விருது மன்னிக்கவும் படத்திற்காக சத்யராஜ்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த த்ரில்லர் குறும்படத்திற்கான ஜூரி விருது நவீன் இளங்கோவன் இயக்கத்தில் வெளியான பனி படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

    சிறந்த பார்வையாளர் விருது

    சிறந்த பார்வையாளர் விருது

    சிறந்த குறும்பட இயக்குனருக்கான ஜூரி விருது யாதுமாகி நின்றாய் படத்திற்காக நித்திஷ் பிரபூஜித்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பார்வையாளர் விருதும் வழங்கப்பட்டுள்ள. அதன்படி சிறந்த திரைப்படத்திற்கான பார்வையாளர் விருது ஒதுக்கீடு திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

    சிறந்த வாழ்க்கை வரலாறு படம் மேதகு

    சிறந்த வாழ்க்கை வரலாறு படம் மேதகு

    சிறந்த குறும்படத்திற்கான பார்வையாளர் விருது கேட்டதற்கு நன்றி படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த குறும்படங்களுக்கான பார்வையாளர் விருது நிழல்கள் படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த நீண்ட குறும்படங்களுக்கான பார்வையாளர் விருது இயல் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த வாழ்க்கை வரலாறு படத்திற்கான ஆடியன்ஸ் விருது மேதகு படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

    சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது

    சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது

    இதேபோல் சிறப்பு ஜூரி விருதும் பல்வேறு படங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சமூகப் பிரச்சனைகளுக்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது ஷார்ட் கட் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சமூக பிரச்சனைகள் பற்றிய சிறந்த குறும்படத்திற்கான விருது GA 30005 வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நீண்ட குறும்படத்திற்கான விருது நிழலாய் வருமோ படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த அறிமுக திரைப்பட தயாரிப்பாளருக்கான விருது கணேஷ் ராமுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது பெஸ்டி திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

    சிறந்த நடிகருக்கான சிறப்பு ஜூரி விருது

    சிறந்த நடிகருக்கான சிறப்பு ஜூரி விருது

    சிறந்த பர்ஃபாமன்ஸுக்கான சிறப்பு ஜூரி விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி சிறந்த துணை நடிகைக்கான விருது மகாமுனி படத்தில் நடித்த மகிமா நம்பியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. ரைசிங் ஸ்டார் வளர்ந்து வரும் இயக்குனர் விருது வண்ணம் திரைப்படத்திற்காக சித்தார்த் தேவதாசனுக்கு வழங்கப்பட்டது. வளர்ந்து வரும் நட்சத்திரம் விருது சென்னாய் படத்திற்காக செம்மலர் அன்னத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த அறிமுக நடிகருக்கான விருது ஷார்ட் கட் படத்திற்காக ஸ்ரீதருக்கு வழங்கப்பட்டது. சிறந்த அறிமுக நடிகருக்கான விருது மேதகு படத்தில் நடித்த குட்டிமணிக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆல்பம் பாடலுக்கான விருது நவாஸ் ஆல்பத்தில் இடம் பெற்றிருந்த நெஞ்சான் கூட்டுல பாடலுக்கு வழங்கப்பட்டது.

    Read more about: canada கனடா
    English summary
    Toronto Tamil international film festival held in Canada. Including Tamil film Mahamuni lot of Tamil films received many awards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X