ஆஸ்கர் கோலாகலம்... டாய் ஸ்டோரி 4-க்கு சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருது

By

Recommended Video

List of all the winners at Oscars 2020 - Video

லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருது டாய் ஸ்டோரி 4 படத்துக்கு கிடைத்துள்ளது.

92 வது ஆஸ்கர் விருது விழா இந்திய நேரப்படி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விருது விழாவை உலகமே ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

Toy story 4 gets Best Animated feature film award

ஹாலிவுட்டின் உருவான சினிமாக்களையும் திரை கலைஞர்களையும் கவுரவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு வருடமும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஹாலிவுட் சினிமாவின் உயரிய விருது விழாவான இதில், கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 92 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. உலக நாடுகளை சேர்ந்த திரை நட்சத்திரங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவிந்துள்ளனர்.

விழா நடைபெறும் டால்பி திரையரங்கம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழா கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர் இல்லாமல் நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது பிராட் பிட்டுக்கு கிடைத்தது. ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருது டாய் ஸ்டோரி 4 என்ற படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜாஷ் கூலி இயக்கியுள்ள இந்தப் படத்தில் டாம் ஹாங்க்ஸ், டிம் ஆலன், டோனி ஹேல் உட்பட பலர் நடித்துள்ள காமெடி படம் இது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X