பெர்லின் படவிழா-துருக்கி படத்துக்கு தங்க கரடி விருது

தேனீக்களை வளர்க்கும் தந்தையை தேடி காட்டுக்குள் செல்லும் 6 வயது சிறுவன் யூசுப் காட்டுக்குள் காணாமல் போகிறான். தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான பாசப் போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது.
இயக்குநர் செமிக் கப்லானெக்லு உருவாக்கிய இந்தப் படம் ரதிகர்கள் மற்றும் ஜூரிக்களின் ஆகரவைப் பெற்றது.
தி கோஸ்ட் ரைட்டர் என்ற படத்தை இயக்கிய 76 வயது போலன்ஸ்கி சிறந்த இயக்குநருக்கான விருதினை வென்றார்.
சிறந்த நடிகை...
'ஹவ் ஐ எண்டட் திஸ் சம்மர்' என்ற படத்தில் நடித்த கிரிகோரி டேப்ரிஜின், செர்ஜி புஸ்கேபாலிஸ் ஆகிய ரஷிய நடிகர்கள் இருவருக்கும் சிறந்த நடிகர்களுக்கான விருது கிடைத்தது.
சிறந்த நடிகையாக ஷினோபு டெராஜிமா தேர்வு பெற்றார். ஜப்பானிய நடிகையான அவர் 'கேட்டர் பில்லர்' என்ற படத்தில் நடித்ததற்காக இந்த விருது பெற்றார்.
Comments


Click it and Unblock the Notifications