Oscars 2019: இது என்னய்யா ஆஸ்கருக்கு வந்த சோதனை?
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழா மேடையின் முன்பக்கம் அமெரிக்க அதிபர் டிரம்பின் தலைமுடி போன்று உள்ளது என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.
91வது ஆஸ்கர் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடந்தது. மார்வெல் ஸ்டுடியோஸின் பிளாக் பாந்தர் படம் ஆஸ்கர் விருது பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
விருது விழாவையொட்டி பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. அந்த மேடை தான் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தலைமுடி
ஆஸ்கர் மேடையின் முன்பக்கம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தலைமுடி போன்று உள்ளது என்று நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆஸ்கர்
டிரம்பா அல்லது ஆஸ்கர் மேடையா? எது நன்றாக உள்ளது?
மேடை
ஆஸ்கர் மேடையை இப்படியும் கிண்டல் செய்து வருகிறார்கள்.

பெருமை
இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் மேடை பிரமாண்டமாக, அழகாக வந்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெருமை அடைந்தனர். இந்நிலையில் நெட்டிசன்கள் அந்த மேடையை கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











