வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு நாகிரெட்டி விருது - சிவகுமார், ஏவிஎம் சரவணன் வழங்கினர்
சிவகார்த்திகேயன் - ஸ்ரீதிவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு பி நாகிரெட்டி விருதினை நடிகர் சிவகுமார், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், நடிகை கே ஆர் விஜயா ஆகியோர் வழங்கினர்.
மறைந்த படத் தயாரிப்பாளர் நாகிரெட்டியின் நினைவாக ஆண்டு தோறும் சிறந்த படத்தைத் தேர்ந்தெடுத்து விருது வழங்குகின்றார் அவரது வாரிசு வெங்கட்ராம ரெட்டி. அத்துடன் ரூ 1.5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கி வருகிறார்.
இந்த ஆண்டு நாகிரெட்டி விருதுக்குரிய படமாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழா நேற்று மாலை சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக பட அதிபர் ஏவி எம் சரவணன், நடிகர் சிவகுமார், நடிகை கே ஆர் விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை ராஜ்யஸ்ரீ, இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரம், இயக்குநர் எஸ் பி முத்துராமன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தயாரிப்பாளர் பி மதன், இணை தயாரிப்பாளர் ஜேம்ஸ், இயக்குநர் பொன்ராம் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி விருதும், பரிசும் வழங்கினர் சிறப்பு விருந்தினர்கள்.


Click it and Unblock the Notifications












