66வது தேசிய திரைப்பட விருதுவிழா.. அசத்தலாய் துணை குடியரசுத் தலைவர் கையால் விருது பெற்ற பிரபலங்கள்!

டெல்லி: 66வது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகைக்காக தேசிய விருதை நடிகை கீர்த்தி சுரேஷ் துணை குடியரசுத் தலைவர் கையால் விருது பெற்றார்.

66-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று காலை நடைபெற்றது.

இந்த விழாவில் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள், நடிகர் நடிகைகள், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.விருது வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றர்.

துணைக்குடியரசுத் தலைவர்

துணைக்குடியரசுத் தலைவர்

தேசிய விருதுகளை வழக்கமாக குடியரசுத் தலைவர்தான் வழங்குவார். ஆனால், இந்த முறை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பதிலாக துணைக் குடியரசுத் தலைவரான வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கினார்.

சிறந்த நடிகை

சிறந்த நடிகை

விருதுகளை பெற்றவர்களுக்கு இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளிக்கவுள்ளார். இன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றுக் கொண்டார்.

சிறந்த தமிழ் படம்

சிறந்த தமிழ் படம்

மகாநடி படத்தில் நடித்ததற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. சேலையில் செம ஹோம்ளியாக அசத்தும் அழகில் சென்று விருதை பெற்றார். தமிழில் சிறந்த படமாக பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய பாரம் படம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

சிறந்த படம்

சிறந்த படம்

கடந்த ஆகஸ்ட் மாதம் 31 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்ட குஜராத்தி மொழி படமான ‘ஹெல்லாரோ' படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

இணைந்து பெற்றனர்

இணைந்து பெற்றனர்

‘உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக்‘ படத்தில் நடித்த விக்கி கெளசால், ‘அந்தாதூன்' படத்தில் நடித்த ஆயுஷ்மான் குரானா ஆகியோர் சிறந்த நடிகர்களுக்கான தேசிய விருதை இணைந்து பெற்றுக்கொண்டனர். ‘உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக்‘ திரைப்படத்தின் இயக்குநர் ஆதித்யதர் சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X