நயன்தாரா விருதை வாங்கிய விக்னேஷ் சிவன்.. அதுவும் இரண்டு விருதுகள்.. எந்த படத்துக்கு தெரியுமா?
சென்னை: JFW இதழ் சார்பாக திரையில் சாதனை படைக்கும் பெண் கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் நடந்த இந்த விருது விழாவில் நடிகை நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது.
ஆனால், நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளாத நிலையில், அவருக்கு பதிலாக அந்த விருதை இயக்குநர் விக்னேஷ் சிவன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சிகளுக்கு நோ
நடிகை நயன்தாரா சமீப காலமாக எந்தவொரு சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். தனது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கும் புரமோஷன் செய்ய வருவதில்லை. ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களுக்கு மட்டுமே புரமோஷன் செய்ய வருகிறார் என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது கிளம்பி உள்ளன. இந்நிலையில், விருது விழா நிகழ்ச்சிகளுக்கும் அவர் வருவதை தவிர்த்துள்ளார்.

பர்சனல் விஷயங்களை
நடிகை நயன்தாரா இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலே அங்கே வருபவர்கள் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளை கேட்டு தொந்தரவு செய்வதாலே சமீப காலமாக அதனை முற்றிலுமாக தவிர்த்து வருகிறார் என்றும், தனக்கு பிரச்சனை இல்லாத இடத்திற்கும் மட்டும் செல்ல முடிவு செய்திருக்கிறாராம்.

நயன்தாராவுக்கு விருது
ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் கண் பார்வையற்ற பெண்ணாக நடிகை நயன்தாரா நடித்திருந்த நெற்றிக்கண் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சிறந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நயன்தாராவுக்கு JFW மேகஸின் விருது அறிவித்திருந்தது.

விருதை வாங்கிய விக்னேஷ் சிவன்
சிறந்த நடிகை விருது மற்றும் சிறந்த உமன் சென்ட்ரிக் திரைப்படம் என இரு விருதுகள் நெற்றிக்கண் படத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகை நயன்தாரா கலந்து கொள்ளாத நிலையில், அந்த படத்தின் தயாரிப்பாளரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் அந்த விருதை பெற்றுக் கொண்டார். லேடி சூப்பர்ஸ்டாருக்கு இந்த விருது என தனது ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவன் ஷேர் செய்துள்ள போட்டோ டிரெண்டாகி வருகிறது.

அதற்குள் அப்டேட்டா
இனிமேல் விக்னேஷ் சிவன் எந்தவொரு ட்வீட் போட்டாலும், இன்ஸ்டாவில் எந்தவொரு போஸ்ட் போட்டாலும், அதற்கு கீழ் அஜித் ரசிகர்கள் வந்து ஏகே 62 பட அப்டேட் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். சமீபத்தில் தான் ஏகே 62 படத்தை லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்றும் அனிருத் இசையமைக்கப் போகிறார் என்றும் அப்டேட் வந்த நிலையில், இந்த ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











