விஜய் டிவி விருது விழாவா? வில்லங்க விழாவா?

By Mayura Akilan

விஜய் டிவி சார்பில் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை மையமாக வைத்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

சிறந்த படம் தொடங்கி, சிறந்த அறிமுக நடிகை, அறிமுக நடிகர் வரை பெரும்பாலும் விஜய் டிவி சேட்டிலைட் ரைட்ஸ் வாங்கிய படங்களுக்கு மட்டுமே அதிக அளவில் விருது வழங்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நயன்தாரா, நஸ்ரியா

நயன்தாரா, நஸ்ரியா

விஜய் விருது விழாவில் நயன்தாராவிற்கு சிறந்த நடிகை விருதும், நஸ்ரியாவிற்கு சிறந்த அறிமுக நடிகை விருதும் வழங்கப்பட்டது. ஆனால் இது ராஜா ராணி படத்தில் நடித்ததற்காக வழங்கப்பட்டது.

ராஜா ராணிக்கு 3

ராஜா ராணிக்கு 3

இதேபோல விஜய் டிவி சேட்டிலைட் ரைட்ஸ் பெற்றுள்ள ராஜா ராணி படத்திற்கு மூன்று விருதுகள் வழங்கப்பட்டன.

கடல் படத்திற்கு 5

கடல் படத்திற்கு 5

கடல் படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர், சிறந்த வில்லன், சிறந்த அறிமுக நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த நடன இயக்குநர் என 4 விருதுகள் கிடைத்தன.

விஸ்வரூபத்துக்கு 2

விஸ்வரூபத்துக்கு 2

இதேபோல கமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு 2 விருதுகள் வழங்கப்பட்டன.

பரதேசி மரியான், பாண்டியநாடு

பரதேசி மரியான், பாண்டியநாடு

விஜய் டிவி சேட்டிலைட் ரைஸ்ட் இல்லாத படங்கள் என்றால் பரதேசி, மரியான், பாண்டியநாடு என பிற சேனல்கள் சேட்டிலைட் ரைட்ஸ் பெற்ற சில படங்களுக்கு மட்டுமே ஒன்றிரண்டு விருதுகள் கிடைத்தன.

தேசிய விருது பாடலுக்கு

தேசிய விருது பாடலுக்கு

தங்கமீன்கள் படத்தில் வரும் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்'.... பாடலை எழுதிய நா.முத்துக்குமாருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ஆனால் விஜய் விருது விழாவில் இந்தப் பாடல் தேர்வு லிஸ்ட்டிலேயே இல்லை என்கின்றனர்.

நா.முத்துக்குமாருக்கு விருது

நா.முத்துக்குமாருக்கு விருது

அதேசமயம் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் வரும் ‘தெய்வங்கள் எல்லாம்'.... என்ற பாடலுக்காக நா.முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசியர் விருது வழங்கப்பட்டது.


தங்கமீன்கள் படத்திற்கு உயிர்கொடுத்ததே ‘ஆனந்த யாழில்' என்ற பாடல் தான். ஆனால் அந்த பாடல் நாமினி லிஸ்டில் கூட சேர்க்கவில்லை அவ்வளவு தரம் கெட்ட பாடலா அது என கேள்வியை எழுப்பினார் இயக்குனர் ராம் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X