ஆர்யா தலையில் இடியை இறக்கிய நஸ்ரியா
சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி அஜீத்துக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.
8வது விஜய் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்ற டிடி, நீயா நானா புகழ் கோபிநாத்துடன் சேர்ந்து தொகுத்து வழங்கினார்.
அப்போது டிடி அஜீத்துக்கு ஒரு கோரிக்கை விடுத்தார்.

ஐஸ்வர்யா அர்ஜுன்
விழாவுக்கு வந்த ஐஸ்வர்யா அர்ஜுனிடம் எந்த ஹீரோ ஸ்மார்ட் என்று நினைக்கிறீர்கள் என்று டிடி கேட்க அவர் சட்டென்று அஜீத் என்றார். உடனே அரங்கமே மகிழ்ச்சி ஆரவாரத்தில் அதிர்ந்தது.

அஜீத்
9வது விஜய் விருது விழாவுக்காவது எங்களுக்காக இல்லை ரசிகர்களுக்காகவாவது வாங்க என்று டிடி அஜீத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நஸ்ரியா
சிறந்த புதுமுக நடிகைக்கான விருதை பெற்ற நஸ்ரியாவிடம் நீங்கள் சிறுவயதில் இருந்து எந்த ஹீரோவை பார்க்க வேண்டும், அவருடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்று டிடி கேட்டதற்கு அவர் அஜீத் என்று பதில் அளித்தார்.

ஆர்யா
எந்த ஹீரோவை நீங்கள் பிரதர் என்று அழைக்க விரும்புகிறீர்கள் என்று டிடி கேட்ட கேள்விக்கு நஸ்ரியா ஆர்யா என்று பதில் அளித்தார்.


Click it and Unblock the Notifications











