»   »  விருதுகள்

விருதுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

1998 ம் ஆண்டிற்கான சிறந்த சமூக சேவை விருது நடிகர் மற்றும் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்துக்கு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சமூக சேவையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 98-ம் ஆண்டு சிறந்த சமூக சேவை விருதிற்காக நடிகர்விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவர் ஆற்றி வரும் சமூகப்பணிகள் மற்றும் மனித வள சேவைகள் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதை குறிக்கும் வகையில் இந்த விருதுவழங்கப்படுகிறது.

முன்னாள் தலைமை நீதிபதி பகவதி, காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, விளையாட்டுத் துறை அமைச்சர் சையத் ஷானவாஸ் ஹூசைன் மற்றும் ஆதிஷ்அகர்வால் ஆகியோர் இவ்விருதுக்குரியவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விருது வழங்கும் விழா நவம்பர் மாதம் டெல்லியில் நடக்கிறது.

Read more about: actor, award, chennai, vijayakanth

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil