twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பேரன்பு'க்காக மம்மூட்டிக்கு ஏன் தேசிய விருது இல்லை?: நடுவர் குழு தலைவர் விளக்கம்

    By Siva
    |

    சென்னை: பேரன்பு படத்தில் சிறப்பாக நடித்த மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது ஏன் கொடுக்கப்படவில்லை என்று தேசிய விருது நடுவர் குழு தலைவர் ராகுல் ரவைல் விளக்கம் அளித்துள்ளார்.

    66வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டபோது அதில் தமிழ் திரையுலக படைப்புகள், கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டது என்று ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். சிறந்த தமிழ் பட பிரிவு என்று ஒன்று இருப்பதால் அதற்கு மட்டும் பெயருக்கு கொடுத்துள்ளார்கள் என்று விமர்சனம் எழுந்தது.

    Mammooty loses national award because...

    சிறந்த நடிகருக்கான விருது ஆயுஷ்மான் குரானா மற்றும் விக்கி கவுஷல் ஆகிய பாலிவுட் நடிகர்களுக்கு கொடுக்கப்பட்டதை பார்த்த தமிழ் ரசிகர்களால் கோபத்தை அடக்க முடியவில்லை.

    தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட உடன் தேசிய விருது நடுவர் குழு தலைவர் ராகுல் ரவைலை மம்மூட்டியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விளாசினார்கள். இதை பார்த்த ராகுல் மம்மூட்டிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்ததாவது,

    உங்களின் ரசிகர்களிடம் இருந்து நிறைய மோசமான இமெயில்கள் வந்துள்ளன. பேரன்பு படத்திற்காக உங்களுக்கு ஏன் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கவில்லை என்று கேட்டு விளாசியுள்ளனர். நடுவர் குழுவின் தீர்ப்பை கேள்வி கேட்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. மேலும் உங்களின் பேரன்பு படத்தை பிராந்திய குழு நிராகரித்துவிட்டது. அதனால் அது மத்திய குழுவிடம் வரவே இல்லை. நடுவரை எப்பொழுதும் கேள்வி கேட்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.

    பெண்களை நீங்க நல்லா யூஸ் பண்ணிக்கிறீங்க.. கவின் மீது பாய்ந்த மது.. அப்போ சாக்‌ஷி சொன்னது உண்மைதானா? பெண்களை நீங்க நல்லா யூஸ் பண்ணிக்கிறீங்க.. கவின் மீது பாய்ந்த மது.. அப்போ சாக்‌ஷி சொன்னது உண்மைதானா?

    ராகுல் அந்த கடிதத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் தனது கடிதத்தை பார்த்த மம்மூட்டி ரசிகர்கள் சார்பில் மன்னிப்பு கேட்டதாகவும் மீண்டும் போஸ்ட் போட்டார். பின்னர் அந்த இரண்டு போஸ்ட்டுகளையும் நீக்கிவிட்டார் ராகுல்.

    பேரன்பு படத்தின் இரண்டாம் பாதி ஜவ்வாக இழுத்ததாகவும் அதில் மம்மூட்டி மீது அந்த அளவுக்கு ஃபோகஸ் இல்லை என்றும் தேசிய விருது நடுவர் குழுவில் இருந்த மலையாள திரையுலகை சேர்ந்த மேஜர் ரவி தெரிவித்தார்.

    தேசிய விருதுகளில் தமிழ் படங்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து இயக்குநர் வசந்த பாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடம் தேசிய விருதுக்கு பேரன்பு, பரியேறும் பெருமாள், வடசென்னை, ராட்சசன், 96 உள்ளிட்ட நிறைய நல்ல, திறமையான, தகுதியான திரைப்படங்கள் சென்றிருந்தும் ஏன் புறக்கணிக்கப்பட்டது தமிழ் சினிமா?

    பேரன்பு திரைப்படத்தில் மம்முட்டி, சாதனா தன் உயிரை கொடுத்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் தந்திருந்தார். யுவனின் இசை, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு என்ன குறை கண்டீர்கள்? கேள்விப்பட்ட போது தான் தெரிந்தது தமிழில் இருந்து நல்ல நடுவர்களும் தேர்வு குழுவுக்கு அழைக்கப்படவில்லை. கண்துடைப்பாக நடுவர்கள் அழைக்கப்படுகின்றனரா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய விருது கமிட்டி நடுவராக ஒரு தினத்திற்கு முன்பு என்னை அழைத்தார்கள். முப்பது நாள் டெல்லி பணிக்கு ஒரு நாள் முன்பு தகவல் தெரிவிப்பது சரியா? இது கண்துடைப்பின்றி வேறென்ன ? இந்த நிலை மாற வேண்டும். தமிழ் உச்ச நட்சத்திரங்களும், திரை ஆளுமைகளும், தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    English summary
    Rahul Rawail, the chairman of the National Film Awards Jury has explained that Mammootty's Peranbu got rejected by the regional panel.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X