கிராமி விருதுப் போட்டியில் 3 இந்தியர்கள் - வெல்வாரா ஏ.ஆர்.ரஹ்மான்?

கடந்த ஆண்டு ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்திய இசை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் ரஹ்மான். இந்த நிலையில் தற்போது கிராமிப் போட்டியில் குதித்துள்ளார்.
இதே போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த தபேலா மேதை ஜாகிர் உசேன், சரோத் மேதை அம்ஜத் அலி கான் ஆகியோரும் உள்ளனர்.
சிறந்த திரைப்பட இசைத் தொகுப்பு (Slumdog Millionaire) மற்றும் சிறந்த திரைப்படப் பாடல் (Jai ho) ஆகிய இரு பிரிவுகளில் ரஹ்மான் பரி்ந்துரைக்கப்பட்டுள்ளார்.
சிறந்த கிளாசிகல் கிராஸ்ஓவர் இசைத் தொகுப்புப் பிரிவில் (The Melody of Rhythm) ஜாகிர் உசேனும், பாரம்பரிய உலக இசைப் பிரிவில் (Ancient Sounds) அம்ஜத் அலிகானும் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் யார் வெல்லப் போவது என்ற எதிர்பார்ப்பி்ல் இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
லாஸ் ஏஞ்சலெஸ் ஸ்டேபிள்ஸ் அரங்கில் இன்று கிராமி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications











