அடிப்பதற்கு முன் அந்த ஜோக்கிற்கு சிரித்தாரா வில் ஸ்மித்? எல்லாமே டிராமாவா? பறக்கும் மீம்கள்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: டூன் திரைப்படம் 6 விருதுகள் வென்றது, மாற்றுத் திறனாளி நடிகர் ஆஸ்கர் வென்றது, பெண் இயக்குநர் சிறந்த இயக்குநர் விருது வென்றது, வில் ஸ்மித் முதல் முறையாக ஆஸ்கர் விருது வென்றது என அனைத்து ஆஸ்கர் விருது விழாவில் முக்கிய தருணங்களையும் ஓரங்கட்டி உலகளவில் டிரெண்டாகி வருகிறது வில் ஸ்மித் கிறிஸ் ராக்கிற்கு கொடுத்த அந்த ஒரு அறை வீடியோ தான்.

மனக்கசப்பு காரணமாக தனது இரண்டாவது மனைவியான ஜடா பின்கெட் ஸ்மித்தை வில் ஸ்மித் பிரிந்து இருக்கும் நிலையில், இப்படியொரு டிராமா போட்டு அவருடன் சேர பார்க்கிறாரா? என ரசிகர்கள் மீம் போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.

நிச்சயமாக இந்த ஒரு நடிப்புக்காகவே வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை கடைசி நேரத்தில் மாற்றி கொடுத்திருப்பார்கள் என்றும் மீம்கள் பறக்கின்றன.

கிறிஸ் ராக்

கிறிஸ் ராக்

எவ்ரிபடி ஹேட்ஸ் கிறிஸ், ஸ்பைரல், க்ரோன் அப்ஸ் உள்ளிட்ட பல பிரபல ஹாலிவுட் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து அசத்தியவர் கிறிஸ் ராக். ஆஸ்கர் 2022 விருது விழாவில் ஹோஸ்ட்டாக பங்கேற்ற அவர் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட் ஸ்மித்தின் மொட்டை தலை பற்றி கிண்டலாக பேச, இன்னொரு வார்த்தை தப்பா பேசினால் அவ்வளவு தான் என வில் ஸ்மித் எச்சரித்தார்.

கட் பண்ணிட்டாங்க

கட் பண்ணிட்டாங்க

ஆஸ்கர் லைவ் நிகழ்ச்சியில் திடீரென தொழில் நுட்பக் காரணமாக சிக்னல் துண்டிக்கப்பட்டதாக கூறி சில நிமிடங்கள் நடந்த இந்த சுவாரஸ்யமான நிகழ்வை இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் ஒளிபரப்பவில்லை. ஜப்பான் உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் வெளியான வீடியோ தான் உலகளவில் தற்போது #whatjusthappened மற்றும் #WillAndChris என டிரெண்டாகி வருகிறது.

இதுதான் நடந்தது

ஆஸ்கர் விருது விழாவில் கிறிஸ் ராக் என்ன பேசினார் என்றும் வில் ஸ்மித் ஏன் கோபப்பட்டு மேடை ஏறி சென்று அவரை அப்படி அடித்தார் என்கிற வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், வில் ஸ்மித் ஆபாசமாக கிறிஸ் ராக்கை திட்டியதையும் இந்த வீடியோவில் காண முடிகிறது.

பறக்கும் மீம்கள்

பறக்கும் மீம்கள்

வில் ஸ்மித் மற்றும் கிறிஸ் ராக் இருவரும் இணைந்து போட்ட ஆஸ்கர் டிராமா தான் இது என்றும் வில் ஸ்மித் செம போதையில் இருந்தார் என்றும் ஏகப்பட்ட நெட்டிசன்கள் பேட்மேன் படத்தின் காமிக்ஸ் வைரல் மீம் டெம்ப்ளேட்டை போட்டு கலாய்த்து வருகின்றனர். வில் ஸ்மித் ஆஸ்கர் வாங்கும் போது இந்த நிகழ்வுக்கு மன்னிப்பும் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை ஏற்றம்

பெட்ரோல் விலை ஏற்றம்

காமன் மேன் விலை வாசியை தடுக்க நினைக்கும் நேரத்தில் பெட்ரோல் விலை ஏற்றம் அவனை ஓங்கி அடித்து உருக்குலைத்து விடுகிறது என சமூக நோக்கத்துடனும் இந்த சீனை மீமாக போட்டு இந்திய ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

முதலில் ஏன் சிரித்தார்

முதலில் ஏன் சிரித்தார்

வில் ஸ்மித் அந்த ஜோக்குக்கு முதலில் ஏன் சிரித்தார் என்றும், அதன் பின்னர் என்ன காரணத்திற்காக அப்படி கோபப்பட்டு அடித்தார் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவரின் இந்த நடிப்புக்குத்தான் ஆஸ்கர் விருது வழங்கினார்களா? என்றும் ஆஸ்கர் நிகழ்ச்சியை ருசிகரமாக்க்க நடத்தப்பட்ட ஸ்டன்ட்டா இது என்றும் ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X