29வது பிலிம்ஃபேர் விருதை வாங்கிய இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்

By Siva

சென்னை: 61வது பிலிம்ஃபேர் விருது விழாவில் விருது வாங்கிய நட்சத்திரங்கள் பற்றி பார்ப்போம்.

61வது பிலிம்ஃபேர் விருது விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விமர்சகர்கள் விருது கிடைத்தது.

மேலும் யார் யாருக்கு விருது கிடைத்தது என்று பார்ப்போம்.

தங்கமீன்கள்

தங்கமீன்கள்

கௌதம் மேனன் தயாரிப்பில் ராம் இயக்கி நடித்த தங்கமீன்கள் படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது கிடைத்தது.

பாலா

பாலா

சிறந்த இயக்குனருக்கான விருது பரதேசி படத்திற்காக பாலாவுக்கு கிடைத்தது.

அதர்வா

அதர்வா

சிறந்த நடிகருக்கான விருதை பரதேசி படத்தில் நடித்ததற்காக அதர்வா முரளி பெற்றார்.

நயன்தாரா

நயன்தாரா

சிறந்த நடிகைக்கான விருது ராஜாராணி படத்திற்காக நயன்தாராவுக்கு கிடைத்தது.

சத்யராஜ்

சத்யராஜ்

ராஜாராணி படத்தில் அசத்தல் அப்பாவாக நடித்த சத்யராஜுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்தது.

தன்ஷிகா

தன்ஷிகா

பரதேசி படத்தில் நடித்ததற்காக தன்ஷிகாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்தது.

ரஹ்மான்

ரஹ்மான்

கடல் படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்தது. இது ரஹ்மான் வாங்கியுள்ள 29வது பிலிம்ஃபேர் விருது ஆகும்.

ஸ்ரீராம்

ஸ்ரீராம்

சிறந்த பாடகருக்கான விருது தங்கமீன்கள் படத்தில் ஆனந்த யாழை என்ற பாடலை பாடிய ஸ்ரீராம் பார்த்தசாரதிக்கு கிடைத்தது.

சக்திஸ்ரீ

சக்திஸ்ரீ

கடல் படத்தில் நெஞ்சுக்குள்ளே பாடலை பாடிய சக்திஸ்ரீ கோபாலனுக்கு சிறந்த பாடகிக்கான விருது கிடைத்தது.

முத்துக்குமார்

முத்துக்குமார்

தங்கமீன்கள் படத்தில் வரும் ஆனந்த யாழை பாடலை எழுதிய நா. முத்துக்குமாருக்கு சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருது கிடைத்தது.

ராஜீவ் மேனன்

ராஜீவ் மேனன்

மணிரத்னம் இயக்கிய கடல் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ராஜீவ் மேனன் பெற்றார்.

தனுஷ்

தனுஷ்

சிறந்த நடிகருக்கான விமர்சகர்கள் விருதை தனுஷ் பெற்றார்.

கௌதம் கார்த்திக்

கௌதம் கார்த்திக்

கடல் மற்றும் நேரம் படத்தில் நடித்த கௌதம் கார்த்திக் மற்றும் நிவின் பாலி ஆகியோருக்கு சிறந்த புதுமுக நடிகருக்கான விருது கிடைத்தது.

நஸ்ரியா

நஸ்ரியா

நேரம் படத்தில் நடித்ததற்காக நஸ்ரியா நஸீமுக்கு சிறந்த புதுமுக நடிகைக்கான விருது கிடைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X