சிறந்த நடிகர் விஜய் சேதுபதி... சிறந்த நடிகை நயன்தாரா... விஜய் அவார்ட்ஸ் வெற்றியாளர்கள் பட்டியல்!
2018ம் ஆண்டுக்கான விஜய் அவார்ட்ஸ் விழாவில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: 2018ம் ஆண்டுக்கான விஜய் அவார்ட்ஸ் விழாவில், சிறந்த நடிகராக விஜய் சேதுபதியும், சிறந்த நடிகையாக நயன்தாராவும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஓவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமா பிரபலங்களுக்கு விஜய் டிவி நிறுவனம் விஜய் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது வழங்கி கவுரவித்து வருகிறுது. சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் , பாடகர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விருது வழங்கும் விழா நடத்தப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, கடந்த வாரம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக அந்த விழா நடத்தப்படவில்லை.
இந்நிலையில் விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கும் விழா நேற்று (ஜூன் 3 ஆம் தேதி) நடைபெற்றது. அதில் சிறந்த நடிகருக்கான விருதை விக்ரம் வேதா படத்தில் நடித்த விஜய் சேதுபதியும், சிறந்த நடிகைக்கான விருதை அறம் படத்திற்காக நயன்தாராவும் தட்டிச்சென்றனர்.
விஜய் அவார்ட்ஸ் 2018ல் விருது வாங்கிய சினிமா பிரபலங்களில் பட்டியல் இதோ உங்களுக்காக...
- சிறந்த படத்தொகுப்பாளர் - பிளோபின் ராஜ், மாநகரம்,
- ஃபேவரைட் படம் - மெர்சல்
- சிறந்த ஒளிப்பதிவாளர் - ரவி பெர்மன், காற்று வெளியிடை
- சிறந்த இயக்குனர் - புஷ்கர் காயத்திரி, விக்ரம் வேதா
- சிறந்த பாடலாசிரியர் - உமா தேவி, அறம்
- சிறந்த துணை நடிகர் (ஆண்) - விவேக் பிரசன்னா, மேயாத மான்
- சிறப்பு அறிமுக நடிகை - அதிதி பாலன், அருவி
- சிறந்த நகைச்சுவை நடிகர் - சூரி, சங்கலி புங்கிலி கதவத்திற
- வாழ்நாள் சாதனையாளர் விருது - சிவக்குமார்
- சிறந்த நடிகை - நயன்தாரா, அறம்
- சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான், காற்று வெளியிடை
- பிடித்த பாடல் - ஆளப்போறான் தமிழன், மெர்சல்
- சிறந்த பின்னணி பாடகர் - அனிருத், வேலைக்காரன்
- சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி, விக்ரம் வேதா
- சிறந்த வில்லன் - எஸ்.ஜே.சூர்யா, ஸ்பைடர்
- சிறந்த நடன இயக்குனர் - பிருந்தா, காற்று வெளியிடை
- பிடித்த கதாநாயகி, நயன்தாரா
- என்டர்டெயினர் ஆப் தி இயர் - தனுஷ்
- சிறந்த துணை நடிகை - ரேவதி, பா.பாண்டி
- பிடித்த இயக்குனர் - அட்லி, மெர்சல்
- சிறந்த புதுமுக இயக்குனர் - லோகேஷ் கனகராஜ், மாநகரம்
- சிறந்த கதை - ரங்கூன்
- சிறந்த புதுமுக நடிகர் - வசந்த ரவி, தரமணி
- சிறந்த திரைக்கதை - புஷ்கர் காயத்திரி, விக்ரம் வேதா
- சிறந்த வசனகர்த்தா - சுரேஷ் சங்கையா, ஒரு கிடாயின் கருணை மனு
- சிறந்த பின்னணி இசை - சாம் சி.எஸ்
- சிறந்த படம் - அருவி
- சிறந்த பின்னணி பாடகி - லட்சுமி, போகன்


Click it and Unblock the Notifications











