For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  "ஜோஷ் ஆப்" #EkNumberChallenge சவால்.. ரொக்கப் பரிசு வெல்ல சூப்பர் சான்ஸ்.. வாய்ப்பை தவற விடாதீங்க

  |

  பெங்களூர்: இந்தியாவின் நம்பர் ஒன், ஷாட் வீடியோ செயலியான Josh (ஜோஷ்), தனது தனித்துவமான விஷயங்களால், வீடியோ உருவாக்கத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திவிட்டது என்று அடித்துச் சொல்லலாம்.

  டாப் படைப்பாளிகள் மற்றும் வளரும் தலைமுறையினரை சரியான விகிதத்தில் இணைத்து அவர்களுக்கான இடத்தை வழங்கியதன் மூலம், குறுகிய காலத்தில், ஜோஷ் ஆப், நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

  பிரபல படைப்பாளிகளின் லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து ரசிக்கவும், தங்கள் சொந்த வீடியோக்களை அப்லோடு செய்யவும், ஜோஷ் செயலி, ஒரு ஹாட்டான பிளாட்பார்ம் என்று மாறிப்போய்விட்டது. வேடிக்கையான பல சவால்களில் படைப்பாளிகள் பங்கு பெறும் வாய்ப்பை ஜோஷ் ஏற்படுத்திக் கொடுக்கிறது. இதன் மூலம், பங்கேற்பாளர்கள் ஒரு ஸ்டார் அந்தஸ்தை பெற முடியும்.

  1 Year Of Josh: Hurry Up And Participate In #EkNumberChallenge; Contest Ends On August 26!

  ஜோஷ் செயலியில் வழங்கப்பட்டுள்ள ஃபில்டர்கள், எஃபெக்ட்ஸ் போன்றவை, பயனாளர்களுக்கு சூப்பரான அழகை வழங்கி அவர்களை செலபிரெட்டிகளை போல காட்டுகிறது. பொழுது போக்கு மற்றும் தனிப்பட்ட நபர்களின் திறமைகளை வெளிச்சம் போட்டு உலகத்திற்கு காட்டியதோடு, நாடு கொரோனாவால், மோசமான பாதிப்பில் சிக்கியிருந்தபோது, #BlueWarrior என்ற கேம்பைன் மூலமாக நிதி திரட்டி அரசுக்கு வழங்கியது.

  இந்த செயலி சில பெரிய பிராண்டுகள் மற்றும் பிரபலங்களுடன் இணைந்து இதுவரை இல்லாத அளவுக்கு, ஈர்க்கக்கூடிய வீடியோக்களை உருவாக்கியுள்ளது. நடனம், இசை, ஃபேஷன் முதல் நகைச்சுவை வரை, பல மொழிகளில் பல வகை வீடியோக்களை வழங்கும் ஒரே ஷாட் வீடியோ தளம் ஜோஷ் மட்டுமே.

  ஜோஷ் செயலி உருவாக்கப்பட்டு ஓராண்டுக்குள் இந்த சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், 'Ek Number'என்ற தலைப்பில் சிறப்பு சவால்களை இந்த செயலி வழங்குகிறது. ஆகஸ்ட் 20ம் தேதி இந்த சவால் ஆரம்பித்தது. இந்தியாவிலுள்ள 8 மொழிகளில், பலவேறுபட்ட விஷயங்களான பேஷன், உணவு, நடனம், காமெடி, பிட்னஸ் போன்றவை தொடர்பான வீடியோக்களை உருவாக்க அழைப்பு விடுக்கப்படுகிறது.

  சோனு சூட், மவுனி ராய் மற்றும் நாட்டின் முன்னணி பிரபலங்கள், #EkNumber என்ற சவாலை துவங்கி வைத்தனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில், பல்வேறு மனிதாபிமான உதவிகளை செய்தவர் பிரபல திரைப்பட நடிகர் சோனு சூட். மவுனி ராய், ஒவ்வொரு இல்லத்திலும் தொலைக்காட்சி பிரபலத்தால் அறியப்படுபவர். பாலிவுட்டிலும் கால் பதித்துவிட்டார். பெரிய திரைப்படங்கள் பல அவர் நடிப்பில் வெளியாக காத்திருக்கின்றன. ஜோஷ் செயலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி முதல் தினமும் ஒரு பிரபலம் லைவ் வீடியோவில் தோன்ற உள்ளார்.

  பிரபலங்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் பங்கேற்கும் சவால்கள் பின்வருமாறு:

  ஃபிட்னஸ்: அத்வான், ஷடன், ஃபைஸ், ஃபைசு, பிஜ்லீ முரளி

  நகைச்சுவை: ஓயே இட்ஸ் பிராங்க், சமீக்ஷா, விஷால் பரேக், சுகைனா சுல்தான், ஹஸ்னைன்

  நடனம்: ஈஷான், சனா சுல்தான் கான், இளவரசர் குப்தா, மோஹக் மங்கனி, தீபக் துளஸ்யன்

  உணவு: மதுரா, ஃபசல், மின்ட் ரெசிபி, டிவின், காருண்யா

  ஃபேஷன்: ஷடன், விஷால் பாண்டே, கிரிஷ் காவலி, பவின், வைஷ்ணவி நாயக், சோனு சூட் மற்றும் மவுனி ராய், கேபிஒய் பாலா, கிங்ஸ் யுனைடெட் சுரேஷ் மற்றும் ருஹி சிங் ஆகியோரும் #EkNumber சவாலில் பங்கேற்கிறார்கள்.

  இந்த சவாலில் பங்கேற்க ஜோஷ் செயலி மற்றும் இன்ஸ்டா ரீல் ஆகியவற்றில் பயன்படுத்த வேண்டிய Hashtags (ஹேஷ்டேக்): #EkNumber, #EkNumberFitnessStar, #EkNumberComedyStar, #EkNumberDanceStar #EkNumberFoodStar and #EkNumberFashionStar.

  ஏற்கனவே, இந்த சவால், பயனர்களிடமிருந்து செம வரவேற்பு பெற்றுள்ளது. ஏனெனில் ஒவ்வொருவரும் தங்கள் உள் படைப்பாற்றலை 'ஏக் எண்' நட்சத்திரமாக மாற்றுகிறார்கள்! மூன்று நாட்களில், 'EkNumber' சவால் 54.9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள், 99.5 மில்லியன் ஹார்ட்கள் மற்றும் 1.2 பில்லியன் வியூஸ் பெற்றுள்ளது!Here's what some more of your favourite influencers have to say about Josh #EkNumber - don't forget to press Heart on these!

  #eknumberchallenge பற்றி சமீக்ஷா வெளியிட்ட வீடியோ:

  https://share.myjosh.in/video/406604d9-a915-497e-bef9-db563b9b3257

  #eknumberchallenge பற்றி பைசல் ஷெயிக் வெளியிட்ட வீடியோ:

  https://share.myjosh.in/video/07a6e789-860d-497e-961c-dd40f08b991e

  அட்னான் ஷாயிக் மற்றும் சோனு சூட் ஆகியோர் #eknumberchallenge சவாலில் பங்கேற்ற வீடியோ இதோ:

  https://share.myjosh.in/video/d3ddf7cd-2977-49aa-89b7-492dbaa1f0f1

  #eknumberchallengeசவாலில் பங்கேற்ற விஷால் பாண்டே மற்றும் மவுனி ராய் வீடியோ இதோ:

  https://share.myjosh.in/video/bc29a2cd-7066-49b2-839a-1eb9172bf36e

  #eknumberchallenge சவால் பற்றி பவின் பானுஷலி கூறும் வீடியோ இதோ:

  https://share.myjosh.in/video/b21dad9e-884c-4863-8a8f-796cd6f605cd

  ஈஷான் மாசி #eknumberchallenge பற்றி வெளியிட்ட வீடியோ இதோ:

  https://share.myjosh.in/video/ea71aa1a-67e3-449a-98fd-fd2afd2f517b

  மதுராவின் ரெசிபி பற்றிய டிப்ஸ் வீடியோவை இங்கே பாருங்கள்:

  https://share.myjosh.in/video/829ffb80-e5a4-4882-828c-bc7e4e64cab8

  பிக்லீ முரளி #eknumberchallenge பற்றி வெளியிட்ட வீடியோ :

  https://share.myjosh.in/video/d918ce71-a05a-432a-b800-0cacdce55ba4

  'Ek Number' சவால், ஜோஷ் செயலி பயனாளர்களுக்கு அடுத்த Ek Number வீடியோ உருவாக்குபவருக்கான வாய்ப்பை தருகிறது. ரூ.50,000 வரை ரொக்கப் பரிசு வெல்லும் ஒரு அருமையான வாய்ப்பும் உங்களுக்காக காத்திருக்கிறது. இந்தியாவின் டாப் ஸ்டார்களுடன் சந்திக்கும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கலாம். ஜோஷ் தனது முதலாவது ஆண்டு கொண்டாட்டத்தை தனது பயனாளர்களுக்காக அருமையாக முன்னெடுக்க உள்ளது என்பதற்கு இதெல்லாம் ஒரு உதாரணங்கள்தான். ஆகஸ்ட் 26ம் தேதியுடன், இந்த சவால் நிறைவடைய உள்ளதால், இப்போதே முந்துங்கள்.

  English summary
  Josh, India's own short video maker app has brought a huge revolution in content creation with its distinctive approach. A perfect amalgamation of top creators in the video-making space and budding talents, the app has become the undisputed No.1 within a short span of time. Josh is the hotshot place for users when it comes to watching the latest videos of popular creators to recording and uploading their own content. It allows them to take part in fun challenges and become a star. The funky effects and filters make the app even more appealing.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X