twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படுதோல்வியடைந்த 25 மெகா பட்ஜெட் திரைப்படங்கள்… அதல பாதாளத்தில் தள்ளாடும் பாலிவுட் திரையுலகம்!

    |

    மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய திரைத்துறையாக கோலோச்சி வருவது பாலிவுட் தான்.

    புதிய முயற்சிகள் முதல் மெகா பட்ஜெட் படங்கள் வரை இந்தியில் அதிகமாக வெளியாகி வருகின்றன.

    ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    மறக்க முடியுமா மயில...பர்த் டே ஸ்பெஷல்: ஸ்ரீதேவி பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யங்கள் மறக்க முடியுமா மயில...பர்த் டே ஸ்பெஷல்: ஸ்ரீதேவி பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யங்கள்

    தனிக்காட்டு ராஜா

    தனிக்காட்டு ராஜா

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழித் திரைப்படங்கள் எல்லாம் தென்னிந்திய சினிமாக்கள் என வகைப்படுத்தப்பட்டு, இந்தித் திரைப்படங்கள் இந்திய சினிமாக்கள் என சர்வதேச அளவில் அடையாளம் காட்டப்பட்டன. மும்பையை மையமாக கொண்டு செயல்படும் பாலிவுட் திரையுலகம், எல்லாவிதத்திலும் தனிக்காட்டு ராஜாவாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அது துயரங்களை சந்தித்து வருகிறது.

    தூள்கிளப்பும் தென்னிந்திய சினிமாக்கள்

    தூள்கிளப்பும் தென்னிந்திய சினிமாக்கள்

    ராஜமெளலியின் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியான 'பாகுபலி' படம், பான் இந்தியா என்ற மார்க்கெட்டை உருவாக்கியது. அதுவரை ஒரு மொழி படத்தை, மற்ற மொழியில் ரீமேக் மட்டுமே செய்துவந்த நிலை போய், பான் இந்தியா லேபிளோடு நேரடியாகவே ரிலீஸ் செய்யப்பட்டன. கொரோனாவுக்குப் பின்னர் வெளியான 'புஷ்பா', 'ஆர்.ஆர்.ஆர்', 'கேஜிஎஃப் 2', 'விக்ரம்' போன்ற படங்கள், இந்தியிலும் சக்கைப்போடு போட்டன. அதேபோல், விக்ரம் வேதா, சூரரைப் போற்று ஆகிய படங்கள் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன.

    ஏமாந்துபோன அக்சய்குமார்

    ஏமாந்துபோன அக்சய்குமார்

    இதனிடையே இந்தியிலும் பிரமாண்டமான படங்கள் தயாராகின. குறிப்பாக பாகுபலி படத்தின் வெற்றியை பார்த்து, அப்படி ஒரு படம் பண்ண நினைத்த அக்சய் குமார், 'சாம்ராட் பிருத்விராஜ்' படத்தில் நடித்திருந்தார். 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிருத்விராஜ் மன்னனின் வாழ்க்கையைப் பின்னணியாக வைத்து உருவான இந்தப் படம், 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியானது. ஆனால், 70 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து மொக்கை வாங்கியது.

    ஷம்ஷேரா, ஜக் ஜக் ஜியோ

    ஷம்ஷேரா, ஜக் ஜக் ஜியோ

    அதேபோல், ரன்பீர் கபூர், சஞ்சய் தத் ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியான 'ஷம்ஷேரா' படம் 150 கோடி பட்ஜெட்டில் உருவானது. ஆனால், திரையரங்குகளில் ரிலீஸான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்காமல், 44 கோடி மட்டும் வசூலித்துள்ளது. இன்னொருபக்கம் 150 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்த 'ஜக் ஜக் ஜியோ' திரைப்படம் மொத்தம் 84 கோடி மட்டுமே வசூலித்தது.

    கங்குபாய் கத்தியவாடி

    கங்குபாய் கத்தியவாடி

    ஆலியா பட் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிருந்த 'கங்குபாய் கத்தியவாடி' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது. மும்பை ரெட் லைட் ஏரியாவின் டானாக மாறிய, கங்குபாயின் பயோபிக்காக உருவான இந்தப் படம், கலவையான விமர்சங்களைப் பெற்றது. ஆனாலும், 60 கோடி ரூபாய் வரை நஷ்டத்தையே இந்தப் படம் சந்தித்ததாக சொல்லப்படுகிறது.

    ஏமாற்றிய ஜெர்சி

    ஏமாற்றிய ஜெர்சி

    2019ல் நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான 'ஜெர்சி' திரைப்படம், வசூலில் வேட்டை நடத்தியது. ரசிகர்களும் இந்தப் படத்தை கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து ஷாகித் கபூர் நடிப்பில் இந்தியில் ரீமேக் ஆன 'ஜெர்சி', 110 கோடி பஜெட்டில் பிரமாண்டமாக உருவானது. ஆனால், இந்தப் படம் மொத்தமே வெறும் 18 கோடி மட்டுமே வசூலித்தது. அதேபோல், கங்கனா ரனாவத் நடித்து வெளியான 'தக்காட்' 85 கோடி பட்ஜெட்டில் உருவாகி 2 கோடி மட்டுமே வசூலித்தது.

    25 படங்கள் தோல்வி

    25 படங்கள் தோல்வி

    இப்படி ஒன்றல்ல இரண்டல்ல கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் மொத்தம் 25 படங்கள் தோல்வியடைந்து, பாலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 83, ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ், சபாஷ் மித்து, குதா ஃஹபீஸ், ரன்வே 34, ஹீரோபண்டி 2, அட்டாக், பச்சன் பாண்டே உள்ளிட்ட படங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 100, 150, 200, 300 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 7 படங்கள், ரிலீஸான சுவடே இல்லாமல் காணாமல் போய்விட்டன.

    தி காஷ்மீர் ஃபைல்ஸ்

    தி காஷ்மீர் ஃபைல்ஸ்

    ஆனாலும், இந்தி திரையுலகுக்கு 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் மட்டும், நம்பிக்கை கொடுத்துள்ளது. 1980 முதல் 90 வரையில் காஷ்மீர் பண்டிட்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவான இப்படம், 14 கோடியில் தயாரிக்கப்பட்டு, 251 கோடி வசூலித்துள்ளது. இப்படியொரு இக்கட்டான சூழலில் இருந்து பாலிவுட் திரையுலகம் எப்படி மீண்டுவர போகிறது என ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் காத்திருக்கின்றனர்.

    English summary
    25 mega-budget movies that failed miserably… The Bollywood industry is reeling in the abyss!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X