ஒரே படத்தில் அறிமுகமாகும் பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் ... யார் யாருனு தெரியுமா ?

மும்பை : ஒரே திரைப்படத்தில் பாலிவுட் திரைப்பிரபலங்களின் வாரிசுகள் திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளனர்.

நடிகை ஸ்ரீதேவி, தமிழ் சினிமாவில் 4 வயதிலேயே இயக்குனர் எம்.ஏ.திருமுகன் இயக்கிய துணைவன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதை தொடர்ந்து நடிகர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெயலலிதா உள்ளிட்ட பலரது படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

3 Bollywood Celebrities Heirs Introducing in same film

ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகிய முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்தார். இவருக்கு கோலிவுட் திரையுலகத்தில் உள்ளது போலவே பாலிவுட் மற்றும் பிர மொழிகளிலும் பல தீவிர ரசிகர்கள் உள்ளனர்.

80 களில் முன்னணி நடிகையாக அசத்தி வந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. திரைத்துறையில் பிஸியாக இருக்கும் போதே தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்துக்கொண்டு செட்டிலானார். ஸ்ரீதேவி மற்றும் போனி கபூருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில் ஜான்வி கபூர் பாலிவுட் முன்னணி நடிகையாக மிரட்டி வருகிறார். தற்போது இவரது தங்கையான குஷி கபூரும் நடிகையாக அறிமுகமாக உள்ளதாக போனி கபூர் கூறியுள்ளார். தயாரிப்பாளராகவும் தந்தையாகவும் நான் இருக்கிறேன். குஷி அறிமுகமாகும் படம் விரைவில் தொடங்கும் என போனிகபூர் கூறியுள்ளார்.

இந்த படத்தில், ஷாருக்கான் மகள் சுஹானா கான், அமிதாப் பச்சன் பேரன் அகஸ்தியா நந்தா, குஷி கபூரும் ஆகியோர் ஒரே படத்தில் அறிமுகமாக இருக்கிறார்கள். அந்தப் படத்தை ஸோயா அக்தர் இயக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். பாலிவுட் ஸ்டார்களின் வாரிகள் 3 பேரும் ஒர நேரத்தில் ஒரே படத்தில் திரைத்துறையில் அறிமுகமாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X