தியேட்டர்களை ஸ்டேடியமாக தெறிக்க விட்டு 5 வருஷமாச்சு.. டிரெண்டாகும் #MSDhoniTheUntoldStory

மும்பை: தல தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான MS Dhoni: The Untold Story திரைப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் ஆவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் தோனி கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் ரசிகர்கள் மனதில் நீங்காத வடுவாக மாறியுள்ள நிலையில், இப்படியொரு நடிகரை இழந்து விட்டோமே என சுஷாந்த் சிங் ரசிகர்களும் கண்ணீர் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் பயோபிக் திரைப்படம் அதிக வசூலை ஈட்டியது என்றால் அது எம்.எஸ். தோனியின் பயோபிக் படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தல தோனி

தல தோனி

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக இடம்பெற்று அணியின் கேப்டனாக மாறி உலக கோப்பையையே வென்று கொடுத்த தோனி ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மாறிய நிலையில், அவரை சென்னை ரசிகர்கள் அன்புடன் தல தோனி என அழைத்து வருகின்றனர்.

ஸ்டேடியமான தியேட்டர்கள்

ஸ்டேடியமான தியேட்டர்கள்

ஸ்டேடியம் போன்ற ஆரவார கொண்டாட்டத்திற்கு தியேட்டர்கள் இந்த படத்தின் ரிலீஸின் போது தான் மாறியது என தோனி மற்றும் சுஷாந்த் சிங் ரசிகர்கள் #MSDhoniTheUntoldStory என்ற ஹாஷ்டேக்கை போட்டு சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மிஸ் யூ சுஷாந்த்

மிஸ் யூ சுஷாந்த்

இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி தோனியின் பயோபிக் திரைப்படமான எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படம் வெளியானது. அதில், அச்சு அசல் தோனியை போலவே மேனரிசம் காட்டி நடித்த சுஷாந்த் சிங்கிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில், ரொம்பவே உங்களை இந்த தருணத்தில் மிஸ் செய்கிறோம் சுஷாந்த் என ரசிகர்கள் கண்ணீர் கடலில் ஆழ்ந்துள்ளனர்.

ரீல் அண்ட் ரியல்

ரீல் அண்ட் ரியல்

தோனியின் திருமணம் எப்படி நடைபெற்றதோ அதே போலவே சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த தோனி பயோபிக் படத்திலும் திருமண காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த புகைப்படங்களை கம்பேர் செய்து ரீல் மற்றும் ரியல் இடையே இருக்கும் ஒற்றுமையை ரசிகர்கள் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர்.

வேற லெவல் வெறித்தனம்

வேற லெவல் வெறித்தனம்

2016ல் இதே நாளில் தியேட்டர்களில் தோனியின் பயோபிக்கை காண சென்ற ரசிகர்கள் 7ம் நம்பர் ஜெர்சியை மாட்டிக் கொண்டு ஸ்டேடியத்திற்குள் பேட் உடன் தோனி நுழையும் காட்சியில் சுஷாந்த் நடித்திருப்பதை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் வெறித்தனம் என கொண்டாடி தீர்த்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X