Aamir Khan Net Worth: 3வது திருமணத்துக்கு ரெடியான 60 வயது அமீர்கான்.. சொத்து மட்டும் இத்தனை கோடியா?

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் தனது 60வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்தியாவில் அதிக அளவு சொத்துகளுக்கு சொந்தக்கார நடிகராக ஷாருக்கான் முதல் இடத்தில் உள்ள நிலையில், அமீர்கானும் பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரராக உள்ளார்.

இதுவரை இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தும் செய்துள்ள அமீர்கான், பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தனது புதிய காதலியையும் அறிமுகப்படுத்திய நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்களை அதிகளவில் ரசிகர்கள் தேடி வருகின்றனர்.

60 year old Aamir Khan s total Net Worth details are here

அல்லு அர்ஜுன் கடந்த ஆண்டு புஷ்பா 2 திரைப்படத்தின் மூலம் எப்படியாவது அமீர்கானின் தங்கல் படத்தின் சாதனையை முறியடித்து விடலாம் என நினைத்தும் முடியாத அளவுக்கு இந்தியாவின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இன்றும் வலம் வருகிறார் அமீர்கான். அவரது சம்பளம் மற்றும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

அமீர்கான் பிறந்த நாள்: தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான், லால் சிங் சத்தா என கடைசியாக அமீர்கான் நடித்த படங்கள் படு தோல்வி அடைந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய படங்கள் நடிப்பதை தவிர்த்து வந்தார் அமீர்கான். மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள அவர், தனது அறுபதாவது பிறந்தநாளை வெகு விமரிசையாக பாலிவுட் பிரபலங்களுடன் கொண்டாடி வருகிறார். கடந்த மூன்று நாட்களாகவே அமீர்கான் பிறந்த நாள் கொண்டாட்டம் மும்பையில் களைகட்டியுள்ளது.

ரஜினிகாந்துடன் இணைந்து: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தை ரீமேக் செய்து இந்தியில் நடித்த அமீர்கான் தென் இந்திய சினிமா மீது மிகவும் ஆர்வத்துடன் உள்ள நிலையில், தனது அம்மாவின் சிகிச்சைக்காக சென்னையில் சில ஆண்டுகள் முகாமிட்டிருந்தார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அமீர்கானின் பிறந்த நாளை முன்னிட்டு க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிடுவார்கள் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அல்லு அர்ஜுனாலேயே முடியல: தங்கல் திரைப்படத்தின் மூலம் 2000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை நடத்தினார் அமீர்கான். அல்லு அர்ஜுன் கடந்த ஆண்டு தனது புஷ்பா 2 திரைப்படத்தின் மூலம் அந்த சாதனை முறியடிக்க நினைத்தார். அதிகபட்சமாக 1875 கோடி ரூபாய் மட்டுமே வசூல் சாதனை நடத்தப்பட்டது. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வெளியான பாகுபலி 2 படமும் 1800 கோடி ரூபாய் வசூல் மட்டுமே பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் வெளியான தங்கல் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 2000 கோடி வசூலை ஈட்டியது. இதுவரை இந்தியளவில் அதிக வசூல் செய்த படமாகவும் அந்த படம் தான் உள்ளது.

Take a Poll

அமீர்கான் சொத்து மதிப்பு: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 6000 கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரராக உள்ளார். நடிகர் நாகார்ஜுனா 3000 கோடி ரூபாய் சொத்துகளுக்கு சொந்தக்காரராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் அமீர்கான் 1860 கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரராக ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர். படங்களுக்கு சம்பளம் வாங்குவதை 20 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்ட அவர், ஷேர் மூலமாகவே பல கோடிகளை சம்பாதித்துள்ளார். இதுவரை இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தும் செய்துள்ளார். மூன்றாவதாக தற்போது கௌரி ஸ்பிராட் என்பவரை காதலித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ள அவர், விரைவில் திருமணம் செய்ய போவதாக பாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X