மகாராஜா வில்லன் நடிகரின் மகள் ஹனிமூனுக்கு எங்கே போயிருக்காரு பாருங்க.. நீச்சல் உடையில் மஜா போஸ்!
மும்பை: பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் இந்த ஆண்டு விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். அனுராக் காஷ்யப்பின் மகள் ஆலியா காஷ்யப்பின் திருமணம் சமீபத்தில் பாலிவுட்டில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், ஏகப்பட்ட பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்று ஆலியா மற்றும் அவரது கணவரை வாழ்த்தினர்.

திருமணம் முடிந்த நிலையில், ஆலியா காஷ்யப் மற்றும் அவரது கணவர் ஷேன் கிரிகோயர் இருவரும் தீவு ஒன்றில் நீச்சல் உடையில் கவர்ச்சிகரமாக தங்கள் தேனிலவை கொண்டாடி வரும் நிலையில், அதன் புகைப்படங்களை ஆலியா காஷ்யப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

பிரபலங்கள் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை தாண்டி ஹனிமூன் உள்ளிட்ட அனைத்து பர்சனல் விஷயங்களையும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகின்றனர். விவாகரத்து உள்ளிட்ட விஷயங்களையும் சோஷியல் மீடியாவில் அறிவித்து வரும் நிலையில், அவர்களின் பதிவுக்கு கீழ் ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்டுகளும் சர்ச்சைகளும் கிளம்பி வருகின்றன.

2 முறை விவாகரத்து: பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க ஆரம்பித்தார். விஜய்யின் லியோ படத்தில் கேமியோ ரோலில் நடித்த அவர் இந்த ஆண்டு நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தில் வில்லனாக மிரட்டினார். தற்போது அந்த படம் சீனாவிலும் 100 கோடி வசூலை நெருங்க காத்திருக்கிறது. 1997ம் ஆண்டு ஆர்த்தி பஜாஜ் என்பவரை திருமணம் செய்த அனுராக் காஷ்யப் 2009ம் ஆண்டு தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் 2011ம் ஆண்டு நடிகை கல்கி கோச்லின் என்பவரை திருமணம் செய்த அனுராக் காஷ்யப் அவரையும் 2015ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

ஆலியா காஷ்யப் திருமணம்: முதல் மனைவி ஆர்த்திக்கு பிறந்த மகள் தான் ஆலியா காஷ்யப் யூடியூபராக பிரபலமான அவரது திருமணத்தை அனுராக் காஷ்யப் கடந்த டிசம்பர் 11ம் தேதி பாலிவுட்டே வியக்கும் வண்ணம் நடத்தி முடித்தார். ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

மாலத்தீவில் ஹனிமூன்: ஆலியா காஷ்யப் தனது கணவர் ஷேன் கிரிகோரியுடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ள நிலையில், அங்கே படுக்கையறை முதல் பீச் வாக் வரை தனது கணவருடன் ஜாலியாக இருக்கும் தேனிலவு போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூர் முதல் பல பாலிவுட் இளம் நடிகைகள் அவரது ஹனிமூன் போட்டோவுக்கு கீழ் கமெண்ட்டுகளை போட்டு வாழ்த்தி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











