AamirKhan: மகளின் திருமணத்தில் முன்னாள் மனைவிக்கு முத்தம்.. பிரிந்தாலும் பழசை மறக்காத சூப்பர் ஸ்டார்

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் தற்காலிகமாக படங்களில் நடிக்காமல் ஓய்வெடுத்து வருகிறார். இன்னொரு பக்கம் தனது இரண்டாவது மனைவி கிரன் ராவையும் விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில், அமீர்கானின் மகள் ஈரா கான் திருமணத்தில் அவரது முன்னாள் மனைவிகள் இருவருமே கலந்துகொண்டனர். அப்போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னாள் மனைவிக்கு முத்தம் கொடுத்த அமீர்கான்
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் அமீர்கானும் மிக முக்கியமானவர். பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள அமீர்கான், பாக்ஸ் ஆபிஸிலும் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். ஆனால் கடைசியாக அமீர் கான் நடிப்பில் வெளியான லால் சிங் சந்தா திரைப்படம் மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார் அமீர்கான்.

Aamir Khan: Aamir Khan kisses ex-wife Kiran at daughters wedding

அதேநேரம் தனது இரண்டாவது மனைவி கிரன் ராவ்வை பிரிவதாகவும் அமீர் கான் அறிவித்தது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ரீனா தத்தா என்பவரை 1986ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார் அமீர்கான். அவரை 2002ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு 2005ல் கிரன் ராவ்வை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இப்போது இரண்டாவது திருமண வாழ்க்கையும் அமீர்கானுக்கு கசந்துவிட்டது. இந்நிலையில், அவரது மகள் ஈரா கான் திருமணம் மும்பையில் நடைபெற்றது.

ஈரா கானுக்கும் நுபுர் ஷிகாரே என்பவருக்கும் மும்பையில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்டில் நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் அமீர்கானின் முதல் மனைவி ரீனா தத்தா, அவரது மகன் ஜுனைத் கான் கலந்துகொண்டனர். அதேபோல் அமீர்கானின் இரண்டாவது மனைவி கிரண் ராவ், அவர்களது மகன் ஆசாத் ராவ் கான் ஆகியோரும் கலந்துகொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் அமீர்கான் தனது குடும்பத்தினருடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.

அப்போது முன்னாள் மனைவி கிரண், மகன் ஆசாத்துடன் பேசிக்கொண்டிருந்த அமீர்கான் திடீரென கிரணின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களை பரவசப்படுத்தியது. பின்னர் கிரண் அங்கிருந்து விலகிச் செல்வதை கவனித்த அமீர்கான், அவரை தனது அருகில் நிற்க வைத்து போட்டோ எடுத்தார். முன்னாள் மனைவிகளுடன் அமீர்கான் சிரித்து பேசிய போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

மகள் ஈரா கான் திருமணத்திற்காக அமீர்கான் கிரீம் நிற ஷெர்வானியும் இளஞ்சிவப்பு தலைப்பாகையும் அணிந்து ஸ்டைலிஷாக என்ட்ரி கொடுத்தார். அதேபோல், அமீரின் முதல் மனைவி ரீனா தத்தா வெள்ளை நீலம் கலந்த தங்க நிற உடையிலும், கிரண் ராவ் தங்கம், பச்சை நிற உடையிலும் வருகை தந்திருந்தனர். ஈரா கான் இளஞ்சிவப்பு மற்றும் நீல நிற வேட்டி பேன்ட்களுடன் டீப்-கட் சோளியில் தேவதையை போல காட்சியளித்தார். ஈரா கான் - நுபுர் அமீர் ரிசப்ஷன் ஜனவரி 8 ஆம் தேதி உதய்பூரில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாம். இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X