இதயம் நொறுங்கியது.. வலது கையாக இருந்தவர்.. உதவியாளர் ஆமோஸ் மறைவுக்கு அமீர்கான் கண்ணீர் அஞ்சலி
மும்பை: நடிகர் அமீர்கானின் உதவியாளாராக நீண்ட காலம் பணியாற்றி ஆமோஸ் கடந்த புதனன்று இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு தனது மனைவியுடன் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார் அமீர்கான்.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். பாகுபலி படத்தின் வசூலை முறியடிக்க முடியாமல் பாலிவுட் திணறியபோது, தங்கல் படத்தை வெளியிட்டு, அதன் வசூலை முறியடித்தவர் அமீர்கான்.
அமீர்கானுக்கு வலது கரமாக கடந்த 25 ஆண்டுகளாக உடன் இருந்த ஆமோஸ் கடந்த புதனன்று காலமானது அமீர்கானை மிகவும் பாதிப்படைய செய்திருக்கிறது.

உதவியாளர் மறைவு
எந்தவொரு பெரிய நோய் பாதிப்பிலும் சிக்காமல் இருந்த அமீர்கானின் உதவியாளர் ஆமோஸ், கடந்த புதன் கிழமை திடீரென உயிரிழந்துள்ளார். ஆமோஸுக்கு 60 வயதாகிறது. அவரது மறைவு செய்து நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவை வெகுவாக பாதித்திருக்கிறது. சமீபத்தில் தான் ஆமோஸ் தாத்தாவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரடைப்பு
இதுவரை பெரியளவில் நோய் பாதிப்பு ஏதுமின்றி நன்றாக ஓயாது உழைத்து வந்த ஆமோஸுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பதறி போன அவரது உறவினர்கள் அவரை மும்பையில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் ஆமோஸ்.

நேரில் அஞ்சலி
தனது திரைப்பயணத்தில் தனது வெற்றி, தோல்வி என பல தருணங்களிலும் நண்பராகவும், சிறந்த ஆலோசகராகவும் விளங்கிய ஆமோஸின் மறைவால் நடிகர் அமீர்கான் மிகவும் நொருங்கி போயுள்ளதாக அவரது நெருங்கிய நண்பர் கரீம் ஹாஜி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். மாஸ்க் அணிந்தபடி வந்த அமீர்கான் மற்றும அவரது மனைவி இருவரும் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கோதுமை பையில் பணம்
கொரோனா நிவாரண உதவி செய்வதில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலரும் வேற லெவலில் தாராளமாக கோடிக்கணக்கான ரூபாய்களை வாரி இரைத்து வருகின்றனர். நடிகர் அமீர்கான் கோதுமை பையில் பணம் வைத்துக் கொடுத்ததாக தகவல்கள் பரவின. ஆனால், அதை தான் செய்யவில்லை என்றும், ராபின் ஹுட் செய்திருப்பார் எனவும் பதிவிட்டு இருந்தார்.
Recommended Video

லால் சிங் சத்தா
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமீர்கானின் பிறந்தநாள் அன்று அவரது அடுத்த படமான லால் சிங் சத்தா படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். கடந்த 1994ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருதுகளை அள்ளிய டாம் ஹேங்க்ஸின் தி ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் ரீமேக் தான் லால் சிங் சத்தா. இந்த படத்தில் அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார். விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











