Laapataa Ladies: டைட்டில் மாற்றபட்ட லாபதா லேடீஸ்.. ஆஸ்காரை குறி வைத்து அமீர் கான் அதிரடி முடிவு!

மும்பை: லாபதா லேடீஸ், திரைப்படம் கடந்த மார்ச் 1ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ஆனால் இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதற்கு முன்னர், 48வது டொரண்டோ சர்வதேச திரைப்படத் திருவிழாவில் திரையிடப்பட்டது. லாபதா லேடீஸ் படத்தை, அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கியுள்ளார். முதலில் திரையரங்கில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற இந்தப் படம் பிறகு ஓடிடியிலும் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நித்தன்ஷி கோயல், ஸ்பார்ஷ் ஸ்ரீவத்சவ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தன்னுடைய முன்னாள் கணவர் அமீர்கானுடன் இணைந்து கிரண் ராவ் தயாரித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூறியதைப்போல் படத்தினை நடிகர் அமீர் கான் மற்றும் அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கிரண் ராவ் இந்தப் படத்தினை இயக்கவும் செய்துள்ளார். இவரது இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு தோபி காட் என்ற படம் வெளியானது. அதன் பின்னர் 12ஆண்டுகளுகளுக்குப் பின்னர் லாபதா லேடீஸ் படம் வெளியானது. கிரண் ராவ் மற்றும் அமீர் கான் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளவும் செய்தனர். அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர். ஆனாலும் இவர்கள் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு இருப்பதாலே இருவரும் இணைந்து படங்களில் பணியாற்றி வருகின்றனர்.

laapataa ladies lost ladies kiran rao

பாராட்டு: லாபதா லேடீஸ் படத்தினைப் பொறுத்தவரையில் படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 6 கோடிகளுக்குள் என கூறப்படுகின்றது. ஆனால் படம் தியேட்டரில் ரூபாய் 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. இதுமட்டும் இல்லாமல் படம் நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஆஸ்கார்: படத்தினைப் பார்த்த பலரும் பாராட்ட, படத்தினை ஆஸ்காருக்கு கொண்டு செல்லவும் வலியுறுத்தினர். ஏற்கனவே இந்தத் திட்டத்தில் இருந்த அமீர் கான் மற்றும் கிரண் ராவ்க்கு இதுபோன்ற பாராட்டுகள் உத்வேகத்தைக் கொடுத்தது. இதனால் படத்தினை ஆஸ்காருக்கு கொண்டு செல்லும் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டனர். ஏற்கனவே இந்தியா சார்பில் 97வது ஆஸ்கார் நாமினேஷனுக்கு லாபதா லேடீஸ் படம் தேர்வான நிலையில், படக்குழு தற்போது நியூயார்க்கில் உள்ளது.

laapataa ladies lost ladies kiran rao

பெயர் மாற்றம்: இதற்கிடையில் படத்தின் பெயரை மாற்றியுள்ளதாக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கிரண் ராவ் அறிவித்துள்ளார். அதாவது லாபதா லேடீஸ் என்ற படத்தின் பெயரை லாஸ்ட் லேடீஸ் என மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றுள்ளது. படம் ஆஸ்கார் வெல்லவும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றனது.

laapataa ladies lost ladies kiran rao

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X