Aamir Khan 3rd Marriage: மூத்த மகனை வைத்துக் கொண்டு 3வது திருமணம் பற்றி பேசிய அமீர்கான்.. தில்லுதான்!

சென்னை: இந்திய சினிமாவிலேயே என்பதை விட உலக சினிமாவிலேயே 2 மனைவிகளையும் 3வதாக திருமணமாகப் போகும் காதலியையும் ஒரே காரில் ஏற்றிக் கொண்டு ஊர் சுற்ற அமீர்கான் ஒருவரால் மட்டுமே முடியும் என்பதை உன்னை நினைத்து படத்தில் வரும் 9 கிரகங்களிலும் உச்சம் பெற்ற ஒருவன் என சார்லி ஜோசியம் சொல்லும் சரியான ஆள் என்றே சொல்லலாம்.

குழந்தைகளுக்கே திருமணம் ஆக வேண்டிய வயதில் பல ஆண்டுகளாக தன்னை விட்டு இன்னொரு ஆணை தேடிச் செல்லாமல் இருக்கும் மனைவிமார்களை எப்படித்தான் சில நடிகர்களால் விவாகரத்து செய்துவிட்டு அடுத்த திருமணத்தை கூலாக செய்ய முடிகிறதோ என பலரும் விமர்சித்தாலும், அது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்றும் பிடிக்காத வாழ்க்கையில் வலுக்கட்டாயமாக சேர்ந்து வாழ்வது எல்லாம் செட்டாகாது என்பதை ஜென்ஸிக்கே பாடம் நடத்திக் கொண்டிருக்கும் 60 வயதான அமீர்கான் வரும் ஜூலை 5ம் தேதி 3வது திருமணத்தை நடத்தப் போவது குறித்து பிரஸ் மீட் வைத்து பேசியுள்ளார்.

Aamir Khan annouced about his 3rd Marriage and seeks blessing from his fans
Photo Credit:

அமீர்கானின் மகன் ஹீரோவாக மாறி 2 படங்களில் நடித்துள்ள நிலையில், அவரை அருகே வைத்துக் கொண்டே தனது 3வது திருமணத்துக்கு அனைவரது வாழ்த்துக்களும் வேண்டும் என அமீர்கான் பேசியிருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமீர்கான் 3வது திருமணம் எப்போ?: வரும் ஜூலை 5ம் தேதி நடிகர் அமீர்கான் தனது 3வது காதலி கெளரி ஸ்பிராட்டை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கான் சமீபத்தில் நடைபெற்ற ராஜ்குமார் ஹிரானியின் Pritam and Pedro வெப்சீரிஸின் ஸ்க்ரீனிங் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது செய்தியாளர்களை சந்தித்த நிலையில், வெளிப்படையாக அமீர்கானே தெரிவித்துள்ளார். அவருடன் அவரது மூத்த மகன் ஜுனைத் கான் உடனிருந்தார்.

மூத்த மகன்: ஷாலினி பாண்டேவுடன் மகாராஜ் வெப்சீரிஸ் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தான் ஜுனைத் கான். இந்த ஆண்டு சாய் பல்லவி உடன் இணைந்து அவர் நடித்த ஏக் தின் படம் பாக்ஸ் ஆபீஸில் ஃப்ளாப் ஆனது. அமீர்கான் மற்றும் முதல் மனைவி ரீனா தத்தாவுக்கு மகனாக பிறந்த ஜுனைத் கான் பாலிவுட்டில் தந்தையின் நிழலிலேயே தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீடுழி வாழ்கவென வாழ்த்துங்கள்: அமீர்கான் பேசும்போது, வரும் ஜூலை 5ம் தேதி என்னோட திருமணம் ரொம்பவே சிம்பிளாக வீட்டிலேயே நடைபெற உள்ளது. குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அதில் பங்கேற்பார்கள். அனைத்து ரசிகர்களின் ஆசியும் எனக்கு வேண்டும். ஹேப்பியா வாழணும்னு வாழ்த்துங்க என அமீர்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவர் எத்தனை வருஷமோ?: அமீர்கானின் பேச்சைக் கேட்ட ரசிகர்கள் 13 வருடத்துக்கு ஒருவரை விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவரை திருமணம் செய்துக் கொண்டிருப்பதாக அமீர்கான் மீது ஏற்கனவே கடுமையான விமர்சனங்கள் உள்ள நிலையில், 60 வயதில் 3வது திருமணம் செய்யப் போகும் அமீர்கான் இப்படி பேசிய நிலையில், நீங்க எப்பவுமே ஹேப்பியா தான் சார் இருக்கீங்க என்றும் இந்த மனைவியுடன் எத்தனை ஆண்டுகள் இருக்கப் போறாரோ? என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X