நேருக்கு நேர் மோதும் பிரபலங்களில் படங்கள்… மன்னிப்பு கேட்ட அமீர்கான் !

மும்பை : பாலிவுட் நடிகர் அமீர் கான் கே.ஜி.எஃப் 2 படக்குழுவினருடன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

நடிகர் அமீர் கான் 8 வயதா இருக்கும் Yaadon Ki Baaraat என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். ஹோலி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவான அறிமுகம் ஆனார். இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது.

கயாமத் சே கயாமத் என்ற திரைப்படத்தில் ஜூகி சாவ்லாவுடன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும் இந்த திரைப்படம் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுத்தந்தது.

லால் சிங் சட்டா

லால் சிங் சட்டா

அமீர் கான் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார் தற்போது இவர், அத்வைத் சந்தன் இயக்கி வரும் 'லால் சிங் சட்டா'எனப் பெயரிட்டுள்ள படத்தில் நடித்துவ வருகிறார். இப்படம் டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் வெளியான Forrest Gump என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக் ஆகும்.

ஏப்ரல் 14 ரிலீஸ்

ஏப்ரல் 14 ரிலீஸ்

இப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கெனவே இதே தேதியில் 'கே.ஜி.எஃப் 2' படம் என்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 'கே.ஜி.எஃப்' முதல் பாகம் இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்ற படம் என்பதால் அதன் இரண்டாம் பாகத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அமீர்கான் மன்னிப்பு

அமீர்கான் மன்னிப்பு

இந்நிலையில் கே.ஜி.எஃப் 2 படக்குழுவினரிடம் தான் மன்னிப்பு கேட்டதாக நடிகர் ஆமிர் கான் கூறியுள்ளார். சமீபத்தில் சினிமா ஊடகம் ஒன்றுக்கு ஆமிர் கான் அளித்துள்ள பேட்டியில், விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகள் இன்னும் முழுமையாக முடியாததால், கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டது. தேதியை முடிவு செய்யும் முன்பாக கே.ஜி.எஃப் 2 படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டூர், இயக்குநர் பிரசாந்த் நீல், நாயகன் யாஷ் உள்ளிட்டோரிடம் நான் மன்னிப்பு கேட்டு என்னுடைய சூழலை விளக்கி, கடிதம் எழுதியிருந்தேன்.

ஆட்சேபனை இல்லை

ஆட்சேபனை இல்லை

தயாரிப்பாளர்களுக்கு இந்த கொரோனா ஊரடங்கு எப்படியான சிரமங்களைக் கொடுத்தது என்றும் கூறினேன். அவர்கள் என்னுடைய தரப்பு நியாயத்தைப் புரிந்துகொண்டு அதே நாளில் படத்தை வெளியிடுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தனர். அவர்களது பெருந்தன்மையால் நான் நெகிழ்ந்து போனேன். நாயகன் யாஷ்ஷிடமும் இதயப்பூர்வமாக உரையாடினேன்அவரும் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியதாக ஆமிர் கான் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X