அந்த நடிகையுடன் தொடர்பா.. விவாகரத்துக்கு இதுதான் காரணமா? வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த அமீர்கான்!

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கான் கடந்த ஆண்டு திடீரென தனது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்வதாக அதிரடியாக அறிவித்தார்.

இருவரும் ஒருவரை ஒருவர் மனம் விட்டுப் பிரிவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின.

அமீர்கானின் இந்த முடிவுக்கு நடிகை ஒருவருடனான தொடர்பு தான் காரணம் என்றும் விரைவிலேயே 3வது திருமணத்தை செய்து கொள்ளப் போகிறார் அமீர்கான் என்றும் வெளியான வதந்திகளுக்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

அமீர்கான் விவாகரத்து

அமீர்கான் விவாகரத்து

லகான், தூம் 3, தங்கல் என ஏகப்பட்ட பாலிவுட் பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த நடிகர் அமீர்கான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி நடிகர் அமீர்கான் மற்றும் அவரது இரண்டாவது மனைவி கிரண் ராவ் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

கோ பேரன்டிங்

கோ பேரன்டிங்

இருவருக்கும் பிறந்த மகன் ஆசாத்தை விவாகரத்துக்கு பிறகும் இருவரும் சேர்ந்து வளர்க்கப் போவதாகவே தெரிவித்தனர். கணவன், மனைவி என்கிற உறவை மட்டும் தான் பிரிகிறோம் என்றும் மற்றபடி இருவரும் ஒன்றிணைந்து வேலை பார்ப்பது உள்ளிட்ட விஷயங்களில் ஒற்றுமையுடன் தான் இருப்போம் என்றும் தெரிவித்தனர்.

நடிகையுடன் காதலா

நடிகையுடன் காதலா

தங்கல் படத்தில் தனது மகளாக நடித்த பாத்திமா சானா சேக் உடன் தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படத்திலும் நடிகர் அமீர்கான் இணைந்து நடித்திருந்தார். திடீரென அமீர்கான் விவாகரத்து அறிவிப்பதற்கு காரணமே அந்த நடிகையுடன் அவருக்கு ஏற்பட்ட காதல் தான் என பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கத் தொடங்கின.

அமீர்கான் பதிலடி

அமீர்கான் பதிலடி

15 ஆண்டுகால திருமண பந்தத்தை உதறித் தள்ளிய நடிகர் அமீர்கான் கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ள பதில்கள் அமீர்கான் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

யாருமே இல்லை

யாருமே இல்லை

கிரண் ராவை விவாகரத்து செய்வதற்கு காரணமாக யாருமே இல்லை என நடிகர் அமீர்கான் கூறியுள்ளார். மேலும், ரீனா தத்தாவை விவாகரத்து செய்த போதும் கிரண் ராவ் காரணமாக இல்லை என்றும் அந்த நேரத்தில் அவர் யாரென்றே தனக்கு தெரியாது என்றும் பின்னர் தான் இருவரும் இணைந்து பழகி நண்பராகி காதல் வளர்த்து திருமணம் செய்து கொண்டோம் என்றும் கூறியிருக்கிறார்.

பிரிய காரணம் என்ன

பிரிய காரணம் என்ன

காதல் மனைவி கிரண் ராவ் உடன் 15 ஆண்டுகால திருமண வாழ்க்கையை நடத்தி விட்டு திடீரென தற்போது பிரியும் முடிவை ஏன் அறிவித்தீர்கள் என்கிற கேள்விக்கு, சுமார், 6 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு நாள் கிரண் ராவ் தான் தன்னிடம் வந்து குடும்ப உறவு வேண்டாம் என்று கூறினார் என்றும், குடும்ப உறவில் சிக்கிக் கொண்டு என்னால் வேறு எதிலும் கவனத்தை செலுத்த முடியாததை பார்த்த அவர், அப்படி ஒரு முடிவை எடுத்தார் என்றும் கூறினார். அதன் பிறகு இருவரும் பல முறை கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்தோம் என்றும் அமீர்கான் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X