Ira Khan: கண்ணீரோடு காரில் சென்ற அமீர்கான் மகள்.. போன வருஷம் தானே கல்யாணம் ஆச்சு?.. என்ன பிரச்னை?

மும்பை: பாலிவுட் நடிகர் அமீர்கான் மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், சமீபத்தில் தனது பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், தனது மூன்றாவது காதலி குறித்து அறிமுகத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.

6 வயது குழந்தைக்கு அம்மாவாக உள்ள கௌரிஸ் ஸ்பராட் என்பவருடன் கடந்த 18 மாதங்களாக லிவிங் டுகெதர் வாழ்க்கையை அமீர்கான் வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய சீக்கிரமே அமீர்கான் மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என பாலிவுட் முழுக்க தகவல்கள் பரவி வருகின்றன.

Aamir Khan daughter Ira Khan cried at her car photos sparks divorce rumours

இந்நிலையில், திங்கட்கிழமை அன்று தனது தந்தை அமீர்கானை சந்தித்து விட்டு திரும்பிய மகள் இரா கான் காரில் கண் கலங்கியபடி சென்ற காட்சிகள் பாலிவுட் ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தியுள்ளன.

2.0 படத்தில் அமீர்கான் நடிக்க வேண்டியது: ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான 2.0 படத்தில் ரஜினிகாந்துக்கு பதிலாக அமீர்கான் நடிக்க வையுங்கள் என சூப்பர் ஸ்டாரே ஷங்கரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், தன்னை மூடி எப்படி யோசித்துப் பார்த்தாலும் அந்த கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் மட்டுமே சரியாக பொருந்துகிறார் என்பதை உணர்ந்துக் கொண்ட அமீர்கான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்து ஷங்கரிடம் வேறு நபரிடம் கேளுங்கள் என்று கூறினேன் என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

கூலி படத்தில் அமீர்கான்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்துள்ளார். அமீர்கானின் பிறந்த நாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட கூலி படத்தின் பிரத்தியேக புகைப்படம் ரஜினிகாந்த் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. கண்டிப்பாக இந்த படம் பான் இந்தியா படமாக இருக்கும் என்றும் ஆயிரம் கோடி வசூல் வேட்டையை நடத்த அமீர்கானின் கேமியோ உதவியாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருதி வருகின்றனர்.

மூன்றாவது திருமணத்திற்கு ரெடி: பாலிவுட் முன்னணி நடிகரான அமீர்கான் ஏற்கனவே ரீனா தத் மற்றும் கிரண் ராவ் என இதுவரை திருமணம் செய்து விவாகரத்தும் செய்து விட்டார். புதிதாக அமீர்கான் கௌரிஸ் ஸ்பிராட் என்பவரை கடந்த 18 மாதங்களாக காதலித்து வருவதாக அறிவித்துள்ளார். கூடிய விரைவில் அவரை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Aamir Khan daughter Ira Khan cried at her car photos sparks divorce rumours

கண்ணீருடன் வெளியேறிய அமீர்கான் மகள்: கடந்த திங்கட்கிழமை அப்பா அமீர் கானை சந்தித்து விட்டு வீட்டை விட்டு வெளியேறிய இரா கான் காரில் கண் கலங்கியபடி இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு பாலிவுட் பிரபலங்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக தனது மகள் இரா கானுக்கு அவருடைய காதலருடன் திருமணத்தை அமீர்கான் நடத்தி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்தில் பிரச்னையா?: கடந்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி நுபுர் ஷிகாரே என்பவருடன் அமீர்கானின் மகள் இரா கான் பதிவு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் கோலாகலமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில், இரா கான் சோகமான முகத்துடன் அப்பாவை வந்து சந்தித்து செல்லும் போது, திடீரென கட்டுப்படுத்த முடியாமல் எமோஷனலாகி கண் கலங்கிய நிலையில், சென்றதை பார்த்த ரசிகர்கள் திருமணத்தில் பிரச்னையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், புகைப்படக் கலைஞர்கள் காரில் ஒரு பெண் அழுவதை எல்லாம் ஜூம் செய்து போட்டோவாக எடுத்து வெளியிடக் கூடாது என்றும் அவர்களுக்கான பிரைவசியை கொடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

FAQs
அமீர்கானின் 3வது காதலியின் பெயர் என்ன?

கெளரி ஸ்ப்ராட்

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X