60வது பிறந்தநாளில் 3வது காதலியை அறிமுகப்படுத்திய அமீர்கான்.. 6 வயசுல குழந்தை வேற இருக்காம்!

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் தனது 60வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். நேற்று கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அமீர்கான் தனது புதிய காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார். கடந்த சில தினங்களாகவே பாலிவுட்டில் பிரமாண்டமாக அமீர்கான் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய முன்தினம் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் அமீர்கான் தனது வீட்டுக்கு பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் உள்ளிட்ட பிரபலங்களை வரவழைத்து மிகப்பெரிய நைட் பார்ட்டியை அரங்கேற்றினார்.

Aamir Khan ready for 3rd marriage with Gauri Sprat who has 6 year old child already stuns Bollywood

அதன் பின்னர், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமீர்கான் அவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடும்போது தனது புதிய காதலியான கௌரி ஸ்பராட் என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கு ஆறு வயதில் மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது திருமணத்திற்கு ரெடி: 60 வயதில் முதல் மனைவியுடன் அறுபதாம் கல்யாணம் பண்ண வேண்டிய வயதில் பாலிவுட் நடிகர் "ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்" என தனது மகன் ஹீரோவான பிறகு கூட மூன்றாவது திருமணத்திற்கு ரெடியாகி இருப்பதை பார்த்து சினிமா பிரபலங்களே பலர் ஷாக் ஆகி உள்ளனர்.

இரண்டு முறை விவாகரத்து: 1965 ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி மும்பையில் பிறந்த அமீர்கான் பாலிவுட் படங்களில் முன்னணி நடிகராக மாறினார். 1986 ஆம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கடந்த 2002 ஆம் ஆண்டு ரீனா தத்தாவை விவாகரத்து செய்து பிரிந்தார் அமீர்கான். லகான் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த கிரண் ராவ் என்பவர் உடன் காதல் ஏற்பட்ட நிலையில், முதல் மனைவியை பிரிந்து இரண்டாவதாக அவரை திருமணம் செய்து கொண்டார். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற இவர்களது திருமணம் 2021 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

Aamir Khan ready for 3rd marriage with Gauri Sprat who has 6 year old child already stuns Bollywood

நடிகையுடன் காதல் கிசுகிசு: தங்கல் படத்தில் அமீர் கானுக்கு மகளாக நடித்த பாத்திமா சனா ஷேக் என்பவர் உடன் காதலில் விழுந்து விட்டார் என பரவலான கிசுகிசுக்கள் பாலிவுட்டை அதிரசெய்தன. ஆனால், தற்போது வேறு ஒரு பெண்ணுடன் கடந்த 18 மாதங்களாக லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன் என்கிற உண்மையை போட்டு உடைத்துள்ளார் கூலி படத்தில் நடித்து வரும் அமீர்கான்.

மூன்றாவது காதலி அறிமுகம்: கௌரி ஸ்ப்ராட் எனும் பெங்களூருவை சேர்ந்த பெண்ணைத்தான் அமீர்கான் காதலித்து வருகிறார் என்பது வெளியாகி உள்ளது. நேற்று நடந்த தனது 60-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பத்திரிகையாளர்கள் மத்தியில் தனது மூன்றாவது காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார். அமீர்கானின் தயாரிப்பு நிறுவனத்தில் இவர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆறு வயதில் மகன்: அமீர்கானுக்கு முதல் மற்றும் இரண்டாவது மனைவியின் மூலமாக ஏற்கனவே மகன்களும் மகளும் உள்ளனர். கடந்த ஆண்டு தனது மகள் இரா கானுக்கு திருமணம் செய்து வைத்தார். மகன் ஜுனாய்த் கான் பாலிவுட்டில் மகாராஜ் படத்தின் மூலம் கடந்தாண்டு ஹீரோவாக அறிமுகமானார். இந்த ஆண்டு குஷி கபூருடன் இணைந்து லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கிலும் அமீர்கான் மகன் நடித்திருந்தார். அமீர்கானின் புதிய காதலியான கௌரிக்கு ஆறு வயதில் மகன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரது வயது வித்தியாசம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. சுமார் 25 ஆண்டுகளாக இருவரும் நண்பர்களாக இருந்து வந்தார்களாம்.

வாழ்த்துக்களும் ட்ரோல்களும்: பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது வாழ்க்கையை வெளிப்படையாக வாழ்ந்து வருகிறார். ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் முன்னிலையில் தனது காதலியை அறிமுகப்படுத்திய அமீர்கானுக்கு பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அமீர்கான் ரசிகர்களும் விரைவில் அவரது மூன்றாவது திருமணத்தை பார்க்க தயாராகி உள்ளனர். அதே நேரத்தில் மகனுக்கு திருமணம் செய்யாமல் 60 வயதிலும் அமீர்கான் புதிய காதலியை அறிமுகப்படுத்துகிறாரே என பயங்கரமான ட்ரோல்களும் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X