twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    10 வயதில் காதலித்தேன்.. அமீர் கான் சொன்ன சீக்ரெட்.. அடடா அவரு அப்பவே அப்படிபோல!

    |

    சென்னை : பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது முதல் காதல் குறித்து சீக்ரெட்டான பல தகவல்களை கூறியுள்ளார்.

    நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் அமீர் கான். பாலிவுட்டுக்கு மட்டுமே தெரிந்த முகமாக இருந்த இவர் தமிழ் ஆடியன்சுக்கு தெரியவைத்த திரைப்படம் தான், ராஜா இந்துஸ்தானி. என்னடா படம் பெயர் கேள்விபட்டமாதிரி தெரியலையா?

    "பர்தேசி...பர்தேசி ஜானாநஹி" என்ற பாடல் இடம் பெற்ற திரைப்படம் தான் ராஜா இந்துஸ்தானி. இந்த பாடலின் அர்த்தம் பலருக்கு புரியவில்லை என்றாரும் அந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. தமிழ் ரசிகர்கள் பலரும் பரதேசி..பரதேசி என அர்த்தமே தெரியாமலே முனுமுனுத்தனர்.

    வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்.. உதவிக்கரம் நீட்டிய அமீர் கான்.. பாராட்டி முதல்வர் !வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்.. உதவிக்கரம் நீட்டிய அமீர் கான்.. பாராட்டி முதல்வர் !

    அமீர்கான்

    அமீர்கான்

    ரங்கீலா, இஷ்க், லகான், ஃபனா, கஜினி, த்ரீ இடியட்ஸ், PK, தங்கல் போன்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் கல்லாக்கட்டின. 2001ம் ஆண்டு வெளியான லகான், சிறந்த வேற்று மொழி திரைப்படப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் பட்டியலில் இடம் பெறவில்லை. சிறந்த திரைப்படத்திற்காக தேசிய விருதை லகான் கைப்பற்றியது.

    லால் சிங் சத்தா

    லால் சிங் சத்தா

    2016ம் ஆண்டு தங்கல் திரைப்படம் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு, லால் சிங் சத்தா ஆகஸ்ட் 11ந் தேதி வெளியாக உள்ளது. 1994 ஆம் ஆண்டு வெளியான ஃபாரெஸ்ட் கம்ப் படத்தின் ரீமேக்குதான் லால் சிங் சத்தா. டாம் ஹாங்க்ஸ் நடித்த ஃபாரெஸ்ட் கம்ப் கதாபாத்திரத்தில் அமீர் கான் நடித்துள்ளார்.

    முன்னணி நடிகர்கள்

    முன்னணி நடிகர்கள்

    இப்படத்தில் அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூரும், அம்மாவாக மோனா சிங் நடித்திருக்கிறார். நண்பராக நாக சைதன்யாவும் நடித்துள்ளார். இந்தப் படம் நாக சைதன்யாவின் முதல் பாலிவுட் திரைப்படமாகும். அத்வைத் சந்தன் இந்த படத்தை இயக்க, அமீர் கானே தனது சொந்த நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திலிருந்து இதுவரை ஃபிர் நா ஐசி ராத் அயேகி, கஹானி மற்றும் மெய்ன் கி கரான் ஆகிய மூன்று பாடல்களை வெளியாகி வெற்றிபெற்றுள்ளன.

    என் முதல் காதல்

    என் முதல் காதல்

    லால் சிங் சத்தா திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணியில் படுபிஸியாக இருக்கும் அமீர்கான், அப்படத்திலிருந்து ரொமான்ஸ் பாடல் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பேசினார். அப்போது, தனது முதல் காதல் அனுபவம் குறித்த ரகசியத்தை பகிர்ந்தார். அப்போது எனக்கு 10 வயது இருக்கும், நான் டென்னிஸ் விளையாடிக் கொண்டு இருந்தேன்.

    Recommended Video

    இளையராஜாவுக்கு 5 பாரத ரத்னா விருது கூட கொடுக்கலாம்! | Tamil Filmibeat
    காதல் நிறைவேறவில்லை

    காதல் நிறைவேறவில்லை

    அப்போது அந்த பெண்ணும் என்னுடன் விளையாடுவார். இதையடுத்து, அந்த பெண் சில நாட்களாக டென்னிஸ் விளையாட வரவில்லை. விசாரித்த போது அவர் வீட்டை காலிசெய்துக்கொண்டு வேறு ஊருக்கு சென்றதாக சொன்னார்கள். மனசு அப்படியே உடைந்து விட்டது. நான் மிகவும் மனமுடைந்து போனேன். இதில் என்ன சிறப்பு என்றால், நான் அவரைக் காதலித்தேன் என்பதே அவருக்குத் தெரியாது. அந்தக் காதல் நிறைவேறியிருந்தால் நான் நல்ல டென்னிஸ் விளையாட்டு வீரனாகி இருப்பேன் எனக் கூறியுள்ளார்.

    English summary
    Aamir khan shared interesting information about her first love
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X