முதல் மனைவி.. 2வது மனைவி.. 3வது காதலி.. ஒரே காருக்குள்.. அமீர்கான் எப்படிப்பா சமாளிக்கிறாரு!
மும்பை: அமீர்கான் விரைவில் 3வது திருமணத்தை செய்துக் கொள்ள உள்ள நிலையில், சமீபத்தில் அவரது முதல் மனைவி, 2வது மனைவி மற்றும் 3வது காதலி உள்ளிட்ட மூவரும் எந்தவொரு ஈகோவும் இல்லாமல் ஒரே காரில் சென்ற சம்பவமும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதும் பாலிவுட்டை மட்டுமல்ல ஹாலிவுட்டையே அதிர வைத்துள்ளது.
சினிமா பிரபலங்கள் ஒரு திருமணத்தை தாண்டி 2 அல்லது 3 சிலர் 5 திருமணங்கள் வரை அதிகபட்சமாக செய்துள்ளனர். ஆனால், விவாகரத்துக்குப் பிறகு முதல் மனைவியும் 2வது மனைவியும் ஒரே இடத்தில் சந்தித்தாலே அது அபூர்வமாக பார்க்கப்படும்.

ஆனால், அமீர்கான் எப்படித்தான் 3வரையும் சமாளித்து ஒரே இடத்தில் ஒருங்கிணைத்தாரோ தெரியவில்லையே என பாலிவுட் மொத்தமும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தில் உள்ளது.
இருப்பது ஒரு லைஃப் எனக்கு 3 வைஃப்: ஒருமுறை தான் இந்த உலகத்துல வாழப்போகிறோம் என அந்த காலத்து ராஜாக்கள் எல்லாம் ஊருக்கு ஊர் சிற்றரசர்களின் மகள்களை திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்ததாக கதைகளில் படித்திருப்போம். அமீர்கான் போன்று அழகும் ஆற்றலும் நிறைந்த மனிதர் தனது 60 வயதில் மகளுக்கு எல்லாம் திருமணம் முடித்த நிலையிலும், தன்னுடைய 3வது திருமணத்திற்கு தயாராகி வருவது வியப்பை ஏற்படுத்தினாலும், அது அவர் தனிப்பட்ட விருப்பமாகவே பார்க்கப்படுகிறது.
13 வருஷத்துக்கு ஒருவர்?: அமீர்கான் முதலில் ரீனா தத்தாவை திருமணம் செய்தார். அவருடன் 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், அதன் பின்னர் லகான் படத்திற்கு பிறகு உதவி இயக்குநராக இருந்த கிரண் ராவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். மேலும், 13 ஆண்டுகள் அவருடன் வாழ்ந்த நிலையில், அவரையும் விவாகரத்து செய்து பிரிந்தார். இந்நிலையில், கெளரி ஸ்பிராட் என்பவரை வரும் ஜூலை மாதம் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
ஒரே காரில் 3 பேர்: கூட பிறந்த அண்ணன் தம்பிகளே ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள ஈகோ பார்க்கும் இந்த காலத்தில், அமீர்கான் எப்படித்தான் தனது முன்னாள் மனைவிகளான ரீனா தத்தா, கிரண் ராவ் மற்றும் புதிய காதலியான கெளரி ஸ்பிராட் மூவரையும் ஒரே காரில் ஏற்றிக் கொண்டும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தும் சமாளித்தார் என்கிற கேள்வி தான் என்னங்க சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியல என்கிற மாமன் பட வடிவேலு டெம்பிளேட்டை நினைவுப்படுத்துகிறது. வாழ்க்கையைப் பற்றி அந்த 3 பேர் நன்றாக புரிந்துக் கொண்டார்களா? அல்லது 3 பேரையும் எப்படி சமாளிப்பது என்கிற வித்தையை அமீர்கான் அறிந்து வைத்துள்ளாரா:? என்பது அவருக்கே வெளிச்சம்.


Click it and Unblock the Notifications