மகளை கேலி செய்வதா?... தைரியம் இருந்தா முன்னாடி வந்து பேசுங்கள் … கொந்தளித்த அபிஷேக் பச்சன் !
மும்பை : கையில் போஃன் இருந்தால் போதும் யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்... அதுவும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நிலை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது-
Recommended Video
சமூக வலைதளத்தை பெண்களையும், செலிப்ரிட்டி குடும்பப் பெண்களையும் ட்ரோல் செய்யும் கருவியாகேவே பலர் பயன்படுத்தி வருகிறார்.
அதுபோலத் தான், பாலிவுட் பிரபலம் அபிஷேக் பச்சன் மகளை ஒரு நெட்டிசன் குழந்தை என்றும் பாராமல் விமர்சித்துள்ளார். இதற்கு அபிஷேக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அபிஷேக் பச்சன்
அபிஷேக் பச்சன் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனின் மகனாவார். இவர் 2000ம் ஆண்டு வெளியான " Refuge" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். பின்னர் பச்சன் மற்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார், அதில் குச் நா கஹோ, பஸ் இத்னா ச க்ஹ்வாப் ஹே போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.

பிறந்தநாள் கொண்டாட்டம்
இதையடுத்து அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பாலிவுட் பிரபலங்களான இந்த தம்பதிக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார். கடந்த மாதம் ஆராத்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு மாலத்தீவுக்குக் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற அபிஷேக் பச்சன், அங்கு தனது மகளின் பிறந்த நாளை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடினார்.

கேலிப்பதிவு
அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ரசிகர்கள் பலரும் ஆராத்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். எனினும் நெட்டிசன்களில் சிலர் ஆராத்யாவின் நடை மற்றும் மேக்கப்பை கேலி செய்திருந்தனர்.

கண்டிக்கத்தக்கது
இந்நிலையில், அபிஷேக் பச்சன் ஊடகங்களுக்கு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில், எனது மகள் ஆராத்யாவின் பிறந்த நாள் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு இருந்தேன். இதைபார்த்த பல நெட்டிசன்ஸ் எனது மகளை கேலி செய்து பதிவை போட்டு இருந்தனர் இது மிகவும் கண்டிக்கத்தக்கது. நானும் எனது மனைவியும் நடிகர்கள் ஆகையால் நீங்கள் கூறும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறோம்.

ஏற்றுகொள்ளமுடியாது
ஆனால், என் மகளை கேலி செய்வதை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆராத்யாவை கேலி செய்பவர்கள் தைரியம் இருந்தால் என் முகத்துக்கு நேரே அதைச் செய்து பார்க்கட்டும் என்று அபிஷேக் பச்சன் அந்த பேட்டியில் மிகவும் கோவமாக பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











