’த்ரிசம்’ கேள்வி.. கடுப்பான ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சனோன்.. ஷாகித் கபூர் ரியாக்‌ஷன் என்ன?

மும்பை: 'காக்டெயில் 2' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு தற்போது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இப்படத்தில் ஓரினச்சேர்க்கை மற்றும் த்ரிசம் (threesome) போன்ற போல்டான காட்சிகள் இருப்பதாகக் கூறப்பட்ட வதந்திகளுக்கு, நடிகர் ஷாஹித் கபூர் முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் படம் குறித்து வலம் வந்த அடிப்படை ஆதாரமற்ற தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

இந்த நிகழ்வில் கீர்த்தி சனோன் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட சக நட்சத்திரங்களுடன் கலந்துகொண்ட ஷாஹித் கபூர், படத்தின் திரைக்கதை குறித்த சர்ச்சைகளைத் தெளிவாகக் கையாண்டார். ரசிகர்களிடையே நிலவிய குழப்பங்களைத் தவிர்த்து, படத்தின் உண்மையான சாராம்சத்தைப் புரிந்துகொள்ளுமாறு அவர் இந்த விழாவின் வாயிலாக வலியுறுத்தினார்.

Threesome Question upsets Rashmika Mandanna and Krithi Sanon at Cocktail event

ஒரு பாலிவுட் பத்திரிகையாளர் இந்த படத்தில் நீங்க த்ரிசம் பண்ணீங்களா என ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சனோன் இருக்கும் போதே மோசமான கேள்வியை எழுப்ப அனைவரும் ஷாக் ஆகினர். அப்போது அதற்கு ரொம்ப கூலாக மைக் வாங்கி, டென்ஷன் ஆகாமல், அப்படியெல்லாம் இல்லை பாஸ். இந்த படத்தை வந்து பாருங்க, இது வேறமாதிரியான படம், கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும் என விளக்கினார். நடிகைகள் கீர்த்தி சனோன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இந்த கேள்வியால் கடுப்பான நிலையில், இது ரொம்பவே dissappointment என அங்கேயே உடைத்து பேசினர்.

ஜான்வி கபூர் பெத்தி படத்தில் அதீத கிளாமராக நடித்த நிலையில், Objectification பஞ்சாயத்து வெடித்தது. இந்நிலையில், ஷாகித் கபூர், ராஷ்மிகா மற்றும் கீர்த்தி சனோன் நடித்துள்ள காக்டெயில் 2 திரைப்படமும் சர்ச்சையில் சிக்குமா என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.

இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், வெளியாகி உள்ள ட்ரெய்லர் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இருப்பினும் ஷாஹித் கபூரின் இந்த விளக்கம், ஊகங்களுக்கும் உண்மைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்துள்ளது. வரும் நாட்களில் படத்தின் பிரமோஷன் பணிகளின்போது, இப்படம் குறித்து மேலும் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரை விமர்சகர்களும் பார்வையாளர்களும் படத்தின் அடுத்தடுத்த நகர்வுகளை மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X