ஷூ லேசை ஏம்மா அங்க கட்டி இருக்க.. மல்லிகா ஷெராவத்தை கலாய்த்த ரசிகர்கள்!
மும்பை :பரபரப்பான இந்த நேரத்தில் கவர்ச்சியாக உடையணிந்து போஸ் கொடுத்து இருக்கிறார் கவர்ச்சி நாயகி மல்லிகா ஷெராவத்.
கவர்ச்சிக்கு கொஞ்சம்கூட பஞ்சம் வைக்காத அவர்தான் மல்லிகா ஷெராவத். எந்த படத்தில் நடித்தாலும் அவருடைய கவர்ச்சி பங்கு அதில் முக்கியமாக இருக்கும்.
தமிழில் தசாவதாரம் படத்தில் கமலுடன் இணைந்து நடித்தது தமிழில் நல்ல பெயரை அவருக்கு வாங்கி தந்தது. ஒஸ்தி படத்தில் சிம்புவுடன் இணைந்து வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவா என்ற பாடலில் அவர் போட்ட குத்தாட்டத்தை யாராலும் மறக்க முடியாது.

ரசிகர்களின் விருப்பம்
தமிழ் படங்கள் ஆகட்டும், ஹிந்தி படத்தில் ஆகட்டும் அவரது கவர்ச்சிக்கு மயங்கியே பல ரசிகர்கள் இருக்கின்றனர்.எப்போதும் கவர்ச்சியை விரும்பும் மல்லிகா ஷெராவத் ஊரடங்கு சமயத்திலும் பலப்பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களால் பெருமளவில் பகிரப்பட்டது.

வைரல் வீடியோ
ஊரடங்கு சமயத்திலும் வீட்டில் இருக்க முடியாத மல்லிகா ஷெராவத் அருகில் இருக்கும் பூங்காவிற்கு கேட்வாக் போட்டு , அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார். இது புகைப்படம் மிகவும் வைரலாக பரவி வருகிறது. அந்த பதிவிற்கு பல லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் வந்து கொண்டு இருக்கின்றன.

டைம் பாஸ்
சமூகவலைத்தளத்தில் மிகவும் பிஸியாக இருக்கும் மல்லிகா. தனது பட சூட்டிங்கில் எடுக்கப்பட்ட பலபல ப்ளூபர் வீடியோக்களையும், பல சிறிய வீடியோக்களையும், அவர் நடனமாடிய சின்ன வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். அவர் பதிவிட்டு வந்த அனைத்து வீடியோக்களும் பெருமளவில் வைரலாக பரவியது.

லூக்கிங் ப்ரெட்டி
மல்லிகாவிற்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்குமாம். அவரது வீட்டில் இருக்கும் குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு நான் பார்க்க எப்படி இருக்கேன் என்று குழந்தையிடம் கேள்வி கேட்டதற்கு அந்த குழந்தை யுவர் பிரெட்டி என்று பதிலளித்தது. அதைக் கேட்ட மல்லிகா ஷெராவத் மிகவும் சந்தோஷமாகிவிட்டார்.
Recommended Video

ஷூ லேஸ்
பல சந்தோஷமான விஷயங்களை வீட்டில் செய்துவரும் மல்லிகா, தற்போது அழகான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும் அந்த உடை மல்லிகாவிற்கு அழகாகவே பொருந்தி இருக்கிறது. பல பேர் பல கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர். சிலரோ பியூட்டிஃபுல், ஹாட், போன்ற பல கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர் ஆனால் சிலரோ ஷூ லேசை ஏம்மா அங்க கட்டிவச்சி இருக்க என்றும் நக்கல் அடித்தும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இதனை கண்டுகொள்ளாத கவர்ச்சி நாயகி மல்லிகா ஷெராவத் அடுத்த போட்டோஷூட்ஸ்காக தயாராகிக்கொண்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











