twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் பேச்சு காயப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்..பாலிவுட் நடிகர் அமீர்கான்!

    |

    சென்னை : என் பேச்சு யாரையாவது காயப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள் என்று பாலிவுட் நடிகர் அமீர்கான் கூறியுள்ளார்.

    இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் அதுல் குல்கர்னி திரைக்கதையில் அமீர்கானின் நடிப்பில் உருவான திரைப்படம் லால் சிங் சத்தா.

    இத்திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதில் சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கான் மற்றும் நாயகியாக கரீனா கபூர் நடித்துள்ளனர்.

    கோச்சடையான் படத்திற்காக கடன் பெற்ற விவகாரம்: லதா ரஜினிகாந்த் மீதான வழக்கில் 3 பிரிவுகள் ரத்துகோச்சடையான் படத்திற்காக கடன் பெற்ற விவகாரம்: லதா ரஜினிகாந்த் மீதான வழக்கில் 3 பிரிவுகள் ரத்து

    லால் சிங் சத்தா

    லால் சிங் சத்தா

    நடிகர் அமீர் கான் நடித்த லால் சிங் சத்தா திரைப்படம் ரூ.180 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 100 பிரபலமான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.

    மன்னித்துவிடுங்கள்

    மன்னித்துவிடுங்கள்

    இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் சகிப்பின்மை அதிகமாகிவிட்டது, எனவே குழந்தைகளின் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறலாமா என கூறியதற்காக இப்போது அவரின் படத்தை புறக்கணிக்கவேண்டும் என சமூக வலைத்தளங்களில் '#bycott lal singh chaddha' ஹாஷ்டேக் டிரெண்டானது. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமீர்கான் என் பேச்சு யார் மனதையும் புண்படுத்தி இருந்தால், மன்னித்து விடுங்கள் என்றார்.

    தூங்கவே இல்லை

    தூங்கவே இல்லை

    மேலும், என் படத்தை பார்க்கவேண்டாம் என நினைத்தால் அவர்களை நான் புரிந்து கொள்கிறேன். இந்த படத்துக்காக நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். பட ரிலீஸை எண்ணி நான் இரண்டு நாட்களாகவே தூங்கவே இல்லை. இன்று படம் ரிலீஸாகி உள்ளது படத்தின் விமர்சனத்தை பார்த்து விட்டுத்தான் நான் தூங்குவேன் என கூறியுள்ளார்.

    நல்ல விமர்சனம்

    நல்ல விமர்சனம்

    இன்று வெளியாகி உள்ள இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.ட்விட்டரிலும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் சரத்குமார், அசோக் செல்வன் உள்ளிட்டோர் லால் சிங் சதா திரைப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர்.

    English summary
    Actor Aamir Khan’s mealy mouthed apology of his film Laal Singh Chaddha
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X