அவர் அழகா இருக்கார்.. என்னுடைய பயோபிக்கில் அவர்தான் நடிக்க வேண்டும்.. துண்டை போட்ட பிரபல ஹீரோ!
சென்னை: தன்னுடைய பயோபிக்கில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற சிவகார்த்திகேயன்தான் நடிக்க வேண்டும் என்று பிரபல நடிகர் தெரிவித்திருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். 1991ஆம் ஆண்டு முதல் பாலிவுட் சினிமாவில் கோலொச்சி வருகிறார் நடிகர் அக்ஷய் குமார். கடந்த 29 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அக்ஷய் குமார்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது, பிலிம் ஃபேர் விருது உட்பட ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ள அக்ஷய் குமார், தமிழில் ரஜினியின் 2.0 படத்தில் நடித்ததன் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.
அரிய நோயினால் அவதிப்படும் ஜெசிகாவை காப்பாற்ற உதவுங்கள் ப்ளீஸ்

பயோபிக் படங்களுக்கு பெயர் போனவர்
நடிகர் அக்ஷய் குமார், இந்தி சினிமாவில் பயோபிக் திரைப்படங்களுக்கு பெயர் போனவர். ஏர்லிஃப்ட், ரஸ்டம், பேட்மேன்,கோல்ட், கேசரி, பிரித்விராஜ் உள்ளிட்ட பயோபிக் படங்களில் அவர் நடித்துள்ளார். அந்த வகையில் தற்போது இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ராவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அக்ஷய் குமார்தான் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற 2020ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார் இந்திய ராணுவ வீரர் நீரஜ் சோப்ரா. ஹரியானாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா,
ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

முதல் முறையாக தடகளத்தில் தங்கம்
சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக தடகளத்தில் தங்கம் வென்ற வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்தார் நீரஜ் சோபப்ரா. அவரது வெற்றியின் மூலம் பதக்கப் பட்டியலில் 67வது இடத்தில் இருந்த இந்தியா, 47வது இடத்திற்கு முன்னேறியது. இதனால் நீரஜ் சோப்ராவையும் அவரது வெற்றியையும் இந்தியாவே கொண்டாடி வருகிறது.

நீரஜ்ஜின் சாதனை வெற்றிக்கு பாராட்டு
நீரஜ் சோப்ராவின் சாதனை வெற்றிக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். மாநில அரசுகள் மற்றும் தனி நபர்கள் பரிசுகளையும் அறிவித்து வருகின்றனர். இதற்கிடையே அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நீரஜ் பயோபிக்கில் அவர்தான் நடிக்க வேண்டும்
நீரஜ் சோப்ராவின் பயோபிக் திரைப்படத்தில் அக்சய் குமார் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கூறி வருகின்றனர். ரசிகர் ஒருவர் அக்ஷய் குமார் கையில் ஒரு கம்புடன் இருக்கும் இளவயது போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு நீரஜ் சோப்ரா பயோ பிக் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்த அக்ஷய் குமாரின் போட்டோ என்றும் கேப்ஷன் கொடுத்திருந்தார் அந்த ரசிகர்.

இது ரொம்ப வேடிக்கையா இருக்கு
அந்த போட்டோ வைரலாகி வந்த நிலையில் நடிகர் அக்ஷய் குமார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் வைரலாகும் அந்த போட்டோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அக்ஷய்குமார், தான் நீரஜ் சோப்ராவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஏற்கனவே பயிற்சியை தொடங்கி விட்டதாக சிலர் கூறி வருகிறார்கள். இது வேடிக்கையாக உள்ளது. என்னுடைய முதல் திரைப்படத்தின் பாடல் காட்சியின் போது எடுக்கப்பட்ட போட்டோ அது என்று கூறியுள்ளார்.

என் பயோவில் அவர்தான் நடிக்க வேண்டும்
மேலும் 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். அப்போது அவரிடம் அவரது பயோபிக் திரைப்படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய நீரஜ், தனது பயோ பிக்கில் அக்ஷய் குமார் அல்லது ரன்தீப் ஹோடா நடிக்கலாம் என்று கூறினார். நீரஜ் சோப்ராவின் பதில் குறித்தும் அந்த பேட்டியில் அக்ஷய் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய அக்ஷய் குமார், நீரஜ் சோப்ரா ரொம்ப அழகாக உள்ளார். எனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்தால் அதில் கதாநாயகனாக நடிக்க நீரஜ் சோப்ரா பொருத்தமாக இருப்பார் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











