பழம் பெரும் மூத்த நடிகர் காலமானார்.. யார் இந்த மனோஜ் குமார்.. சோகத்தில் திரைத்துறை
சென்னை: பழம் பெரும் நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான மனோஜ் குமார் வயது மூப்பால் வரும் சில உடல் நல பிரச்சனைகள் காரணமாக கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் உயிரிழந்தார். அவருக்கு வயது 87. இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பல தேசபக்தி கொண்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவரை பரத் குமார் என அவரது ரசிகர்கள் அன்போடு அழைத்து வந்தனர். இவர் 1937ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஹரிகிருஷ்ண கிரி கோஸ்வாமியாகும், இவர் மனோஜ் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் அந்த பெயரையே தனது பெயராக்கிக் கொண்டார். இந்திய சினிமாவின் திறமை வாய்ந்த நடிகரான இவர், தேசிய விருது, பல்வேறு பிரிவுகளில் ஏழு பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார். மேலும் இவருக்கு 1992 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2015ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதும் வழங்கப்பட்டது.

நடிகர் மனோஜ் குமார்: ஹனிமூன் படத்தில் ஒரு சின்ன ரோலில் அறிமுகமான இவர், பியா, மிலன் கி ஆஸ், சுஹாக் சிந்தூர், ரேஷ்மி ரூமல் ஆகிய படத்தில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் தோல்வி அடைந்தன. இருந்த போதும்,1962 ஆம் ஆண்டு வெளியான ஹரியாலி படம் இவர் நல்ல நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தது. அதன் பின் விஜய் பட் இயக்கத்தில் மாலா சின்ஹா இணைந்து நடித்த படம் ரஸ்தா படம் வசூலை அள்ளிக்குவித்து இவரை புகழின் உச்சிக்கு ஏற்றிவிட்டது. அதன்பின் இவர் நடித்த ஷாதி, டாக்டர் வித்யா,கிரஹஸ்தி போன்ற படங்களும் வசூலை அள்ளின.
திடீர் மறைவு: இவர் புரட்சியாளர் பகத் சிங்கின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஷஹீத் படத்தில் நடித்தார். இவருக்கு சசி என்ற மனைவியும், குணால் மற்றும் விஷால் என்ற இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்,கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் உயிரிழந்தார். இவரது மறைவு பாலிவுட் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரசிகர்கள் இரங்கல்: மனோஜ் குமார் மறைந்த செய்தி இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, அவரின் ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது நடிப்பால் கவரப்பட்ட ரசிகர் ஒருவர், தனது எக்ஸ் தளப்பக்கத்தில் "நீங்கள் என்றென்றும் நினைவில் இருப்பீர்கள், ஒரிஜினல் 'பரத் குமார்' என்றும், மற்றொரு ரசிகர், "உண்மையான திரைப்பட தயாரிப்பாளர். தேஷ் பக்தி கே கானே அஜ் பி இன்கே ஹி பஜ்தே ஹை எனபதிவிட்டு கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











