Actor Cillian murphy: நான் ஹீரோ மட்டும் இல்லீங்க.. மிரட்டும் ஆஸ்கர் நாயகன் கிலியன் மர்ஃபி!

சென்னை: 96வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து முடிந்துள்ளது. இதில் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓபன்ஹேய்மர் படம் ஏழு ஆஸ்கர் விருதுகளை அள்ளியுள்ளது. இந்த படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த துணை நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைப்படம் என ஏழு விருதுகள் கிடைத்துள்ளன. இந்த படத்தில் நடிகர் கிலியன் மர்ஃபி லீட் கேரக்டரில் நடித்திருந்தார். இவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ள நிலையில் இதுதான் இவரது முதல் ஆஸ்கர் விருது.

முன்னதாக படத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் ஏழு முறை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கும் இதுதான் முதல் ஆஸ்கர் விருதாக அமைந்துள்ளது. மேடை நாடகங்களில் நடித்து வந்த இந்தப் படத்தின் நாயகன் கிலியன் மர்ஃபி, முன்னதாக தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி காலகட்டங்களிலேயே மேடை நாடகங்களில் நடித்து அதன் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். ஆனால் இவருக்கு இசையில் தான் அதிகமான விருப்பம் இருந்துள்ளது. முழுநீள இசை கலைஞராக மாற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை இவர் மேற்கொண்டு இருந்துள்ளார். ஆனால் இவரது நடிப்பு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆஸ்கர் விருதுக்கும் சொந்தக்காரராக மாறியுள்ளார்.

Actor Cillian murphy gets Oscar award who mesmerise fans by his acting

ஆஸ்கர் விருது விழா: 96வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து முடிந்துள்ளது. விழாவில் சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த துணை நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த திரைப்படம் என ஏழு விருதுகளை வென்று குவித்துள்ளது ஓபன்ஹெய்மர் படம். இந்த படத்தை கிரிஸ்டோபர் நோலன் இயக்கியிருந்த நிலையில் படத்தில் கிலியன் மர்ஃபி லீட் கேரக்டரில் நடித்திருந்தார். படம் ஏழு ஆஸ்கர் விருதுகளை அள்ளியுள்ள நிலையில் கிலியன் மர்ஃபி மற்றும் கிறிஸ்டோபர் நோலன் இருவருக்குமே இது முதல் ஆஸ்கர் விருது. முன்னதாக கிறிஸ்டோபர் நோலன் ஏழு முறை ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கிலியன் மர்ஃபி: இந்நிலையில் அவருக்கு முதல் முறையாக ஆஸ்கர் விருதை ஓபன்ஹெய்மர் படம் பெற்று தந்துள்ளது. அயர்லாந்தில் பிறந்த கிலியன் மர்ஃபி தற்போது ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். அயர்லாந்தில் பிறந்த நடிகர் ஒருவர் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது இதுதான் முதல் முறை. இந்த பெருமையை தற்போது உருவாக்கியுள்ளார் கிலியன் மர்ஃபி. அயர்லாந்தின் பிறந்த கிலியன் மர்ஃபி தன்னுடைய 10வது வயதிலேயே பாடல்கள் எழுதுவதிலும் அதனை இசைத்து பாடுவதிலும் சிறப்பாக இருந்துள்ளார். பள்ளியில் திடீரென ஒரு நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. எந்தவித ஆர்வமும் இல்லாமல் இதில் பங்கேற்ற போதிலும் அவருக்கு மிகச் சிறந்த பாராட்டை இந்த வாய்ப்பு பெற்றுக் கொடுத்துள்ளது.

கிலியன் மர்ஃபியின் விருப்பம்: முழு நேர இசை கலைஞராக மாற வேண்டும் என்பதே கிலியன் மர்ஃபியின் கனவாக இருந்த நிலையில் தன்னுடைய சகோதரருடன் இணைந்து பல இசைக்கச்சேரிகளை அவர் நடத்தியுள்ளார். கல்லூரி காலத்தில் சில மேடை நாடகங்களில் கவனம் செலுத்த துவங்கிய கிலியன் மர்ஃபிக்கு ஷேக்ஸ்பியர் நாடகங்கள் சிறப்பாக கைக்கொடுத்துள்ளன. இந்த நாடகங்கள் மூலம் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். டிஸ்கோ பிக்ஸ் என்ற மேடை நாடகம் திரைப்படமாக உருவான நிலையில் இந்த படம் கிலியன் மர்ஃபிக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. தொடர்ந்து பல படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ஹீரோவும் நானே.. வில்லனும் நானே: கடந்த 2005ம் ஆண்டு இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுடன் பேட்மேன் பிகின்ஸ் என்ற படம் மூலம் இணைந்து பணியாற்றியுள்ளார் கிலியன் மர்ஃபி/ தொடர்ந்து இன்செப்ஷன், டன்கிரிக் என அதிரடி வெற்றி படங்களை இந்த கூட்டணி கொடுத்த நிலையில் அடுத்ததாக ரெட் ஐ என்ற படத்தில் வில்லன் கேரக்டரிலும் மிரட்டலான நடிப்பை கொடுத்து ரசிகர்களை அதிரடி சரவெடியாக மிரட்டினார். திருநங்கையாக பிரேக்பாஸ்ட் ஆன் ப்ளூட்டோ என்ற படத்தில் நடித்து அதிரடி கிளப்பினார்.

ஆஸ்கர் பெற்று கொடுத்த ஓபன்ஹெய்மர்: பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தவருடைய கேரியரில் சிறப்பாக அமைந்தது பயோபிக்காக வெளியான ஓபன்ஹெய்மர் படம். இந்த கேரக்டருக்காக அதிகமாக மெனக்கெட்டுள்ளார் கிலியன் மர்ஃபி, தன்னுடைய உடல் எடையையும் இந்த படத்திற்காக குறைத்து இருக்கிறார், இந்தப் படத்தில் குற்ற உணர்வை வெளிப்படுத்தும் காட்சிகளில் கிலியன் மர்ஃபி நடிப்பு ஏராளமானவர்களை மெய்மறக்க செய்தது. இதுவே இவர் ஆஸ்கர் விருது பெறவும் காரணமாக அமைந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X